baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோவிலில் அம்மாவை சந்திக்கும் கோபி கட்டிப்பிடித்து எப்படி இருக்கீங்க என நலம் விசாரிக்கிறார். பதிலுக்கு ஈஸ்வரியும் நீ எப்படி இருக்கப்பா எங்க தங்கி இருக்க சாப்டியா இல்லையா என கேட்கிறார். நீ திரும்பவும் வீட்டுக்கு வந்துடு யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க நான் பாத்துக்குறேன் என ஈஸ்வரி சொல்ல அத பத்தி தான் உங்ககிட்ட பேச வந்தேன் என கூறுகிறார்.
என்னப்பா சொல்லு என கேட்க நான் ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க போறேன் என சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். இது விஷயத்தை கேட்டு அதிர்ச்சியாவாதீங்க என சொல்ல நீ என்கிட்ட விளையாடுற சும்மா சொல்லாத என ஈஸ்வரி கேட்க இல்லம்மா சத்தியமா சொல்றேன் என சாமி மீது சத்தியம் வைத்து சொல்ல ஈஸ்வரி பேரதிர்ச்சி அடைகிறார். உனக்கு என்ன பைத்தியமா ஏன் இப்படி பண்ற கல்யாணமான பையன் இருக்கான், கல்யாண வயசுல ஒரு பையன், வயசுக்கு வந்த ஒரு பொண்ணு இருக்கும்போது இதெல்லாம் தேவையா? இதெல்லாம் சரியில்ல நீ வீட்டுக்கு வந்துடு என சொல்ல கோபி எதுக்காகவும் என்னுடைய முடிவை மாத்திகிறதா இல்லை என கூறுகிறார்.
இத்தனை வருஷம் குடும்பத்துக்காகவும் பிடிக்காத மனைவியுடன் வாழ்க்கை வாழ்ந்து என்னுடைய சந்தோஷத்தை தொலைச்சதெல்லாம் போதும் இனிமே எனக்கு புடிச்ச வாழ்க்கையை வாழ ஆசைப்படுறேன் என்னை புரிஞ்சுக்கோங்க என கோபி சொல்ல ஈஸ்வரி திட்டுகிறார். அதான் எல்லாரும் சேர்ந்து என் ரத்தத்தை உறிஞ்சி சக்கையா தூக்கி போட்டுட்டீங்களே இன்னும் என்ன இருக்கு என கோபி ஆவேசப்பட ஈஸ்வரி என்னடா உலகத்திலேயே நீ மட்டும் தான் குடும்பத்துக்காக உழைக்கிற மாதிரி பேசுற, உன்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்க என கூறுகிறார்.
எனக்கு கல்யாணமானாலும் என்னுடைய பொண்ணுக்கும் குடும்பத்திற்கும் என்ன செய்யணும் அத நான் தவறாமல் செய்வேன் என சொல்ல நீ வீட்ல இருந்து செஞ்சா அது பெருமை இதுவே வெளியில வேற ஒருத்தியோடு இருந்து செஞ்சா அது அசிங்கம் அப்படிப்பட்ட அசிங்கமான பணம் எங்களுக்கு தேவையில்லை என ஈஸ்வரி சத்தம் போடுகிறார். என்னுடைய நிலைமையை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கண்டிப்பாக கல்யாணத்துக்கு வந்து எங்கள ஆசீர்வாதம் பண்ணனும் என சொல்ல ஈஸ்வரி இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பாக்குறேன் என சவால் விட்டு செல்கிறார்.
இந்த பக்கம் கோபி யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. அம்மா கிட்ட சொல்ல வேண்டியது சொல்லிட்டேன் என கூறுகிறார். இந்த பக்கம் பாக்கியா கல்யாணத்துக்கு சமைக்கும் விஷயம் பற்றி பேசிக் கொண்டிருக்க அப்போது வரும் ஈஸ்வரி கோபியின் திருமணம் பற்றி மறைமுகமாக பேச பாக்கியா இனி என்னுடைய வாழ்க்கையே சமையல் தான். நடந்து முடிந்த விஷயத்துக்காக வீட்டில் முடங்கி போனா பணம் வராது. இந்த குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் எல்லா செலவையும் நானே கவனிக்கணும் அதுக்கு உழைக்கணும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…