baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி பாக்யாவுக்கு போன் பண்ணி கண்ட மணிக்கு பேசிய நிலையில் கடுப்பாகி போனை கட் செய்து விடுகிறார். செல்வி மற்றும் ஜெனி யார் என கேட்க தேவையில்லாத போன் கால் ஆனா இந்த மாதிரியான போன் கால் தான் நம்புவதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என சொல்கிறார். மேலும் குடும்பத்த சமாளிக்க இப்போ பண்ணிட்டு இருக்க இந்த மசாலா பிசினஸ் கேட்டரிங் ஆர்டர் பத்தாது இன்னும் பெருசா ஏதாவது செய்ய வேண்டும் யோசிக்க வேண்டும் என பாக்யா கூறுகிறார்.
இன்னும் பெருசா என்ன பண்ண முடியும் நம்மளால சமாளிக்க முடியுமா என சொல்ல பாக்கியா முடியும் என்று நினைத்தால் முடியும் என்று உறுதியாக சொல்ல ஜெனி அவரை பாராட்டுகிறார். அடுத்ததாக வீட்டில் உள்ளவர்கள் வந்து இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்டிட்டியா என கேட்க பாக்யா அமைதியாக இருக்க அப்போது வந்த இனியா அப்பா ஸ்கூல் பீஸ் கட்டின விஷயத்தை சொல்ல ஈஸ்வரி கோபி பெருமையாக பேசுகிறார்.
இந்த பக்கம் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்து ராதிகா கோபியை சந்தித்த விஷயத்தை சொல்ல அவருடைய பரிதாபமான நிலையை பற்றி சொல்ல அவரது குடும்பத்தார் உடனே கோபியை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவருக்கு ஆதரவாக இரு என சொல்கின்றனர். ஆனால் ராதிகா எனக்கு இப்ப கோபி மேல இருக்கறது வெறும் பரிதாபம் தான் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…