ஈஸ்வரி வெளியே வர ராதிகா கடுப்பாகி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் திங்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டில் பிரச்சனை இருந்தால் அதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் இப்படி பொய் கேஸ் கொடுக்கக் கூடாது என்று கோபப்படும் நீதிபதி இன்ஸ்பெக்டரையும் பிடித்து திட்டுகிறார். இறுதியாக மயூராவின் சாட்சிக்கு பிறகு இந்த வழக்கில் பெரிய திருப்பம் உருவாகியுள்ளது.. ஈஸ்வரி குற்றம் அற்றவர் என கூறி அவரை விடுதலை செய்து இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என உத்தரவு போடுகிறார். இதனால் கமலா அதிர்ச்சியாக ராதிகா கமலாவை முறைக்கிறார்.
பிறகு ராதிகா கமலா மற்றும் மயூரா என மூவரும் கோர்ட்டில் இருந்து வெளியே வர மயூவை பார்த்த பாக்கியா நன்றி சொல்வதற்காக செல்ல ராதிகா யாரைக் கேட்டு குழந்தையை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க என்று கோபப்படுகிறார். கமலா உங்க டிராமாவுல குழந்தையையும் சேர்த்து பொய் சாட்சி சொல்ல வச்சிருக்கீங்க என்று கோபப்படுகிறார்.
பிறகு கமலாவிடம் இப்போ உனக்கு சந்தோஷமா என்னை பொய்க்காரியாக்கிட்ட.. வீட்டு பக்கமே வந்துடாத என்று கோபத்தை காட்டுகிறார் ராதிகா.
அடுத்ததாக ஈஸ்வரி வெளியே வர பாக்யாவை பிடித்து கண்கலங்குகிறார்.
அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் ஆவலுடன் காத்திருந்து ஈஸ்வரிக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்கின்றனர்.
ரூமுக்குள் வந்ததும் ஈஸ்வரி நீ இல்லனா நான் உள்ளவே கிடந்து செத்துப் போய் இருப்பேன் என்று கலங்க ஈஸ்வரி அப்படியெல்லாம் நடக்க விட்டிருக்க மாட்டேன் என்று ஆறுதல் சொல்கிறார்.
பிறகு குளித்து முடித்த ஈஸ்வரி பொட்டு வைக்காமல் உட்கார்ந்து இருக்க பாக்யா போட்டு வைத்து தலையை துவட்டி சாம்பிராணி போட்டு தலைவாரி விட்டு சாப்பாடு கொடுக்க செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…