ஈஸ்வரியை நினைத்து வருத்தத்தில் குடும்பத்தினர், சந்தோஷப்படும் கமலா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா அப்செட் ஆக இருக்க கமலா அவரிடம் உன் மாமியார் கும்பகோணம் போயிருக்காங்களாம் வந்ததும் போலீஸ் கைது பண்ணிடுவாங்க என்று சொல்ல ராதிகா பயந்து நடுங்க கமலா அந்த அம்மா ஜெயிலுக்கு போனா தான் நீ நிம்மதியா இருக்க முடியும் என்று ராதிகாவின் மனதை மாற்றுகிறார். இந்த நேரம் பார்த்து கோபி கதவைத் தட்ட கமலா எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.. நீ எதையும் உளறி விடாதே என்று சொல்கிறார்.

அடுத்ததாக பாக்யாவின் குடும்பத்தில் எல்லோரும் பதற்றத்தில் இருக்க லாயரை பார்க்க போயிருந்த எழில் செழியன் வீட்டுக்கு வந்து ஆஜராவதை தவிர வேறு வழி இல்லை என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதையடுத்து பாக்யாவின் குடும்பத்தினர் எல்லோரும் வீட்டுக்கு வந்து விட ஈஸ்வரி எல்லோரிடமும் எப்படி இருக்கீங்க என்று விசாரிக்க எல்லோரும் முகத்தை தொங்க போட்டு நிற்கின்றனர்.

இதையடுத்து கிச்சனுக்கு சென்ற பாக்கியலட்சுமி கண் கலங்கி அழ செல்வி எதுவுமே பண்ண முடியாதா என்று கேட்க பாக்கியா நானும் நிறைய பேர் கிட்ட பேசிட்டேன். எதுவுமே பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க என்று வருத்தப்படுகிறார்.

அடுத்து செழியனுக்கு போன் செய்த போலிஷ் ஈஸ்வரி வந்துட்டாங்களா என்று விசாரித்து கிளம்பி வருவதாக அதிர்ச்சி கொடுக்கின்றனர். நாங்களே கூட்டிட்டு வரோம் என்று கேட்டும் போலீஸ் மறுக்கின்றனர்.

பிறகு கமலா வாசலுக்கு வந்து வந்து ஆவலோடு காத்திருக்க சந்துரு போன் போட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பிட்டாங்க எப்ப வேணாலும் வந்து கைது பண்ணுவாங்க என்று சொன்னது கமலா ராதிகாவுடன் சந்தோஷப்பட்டு வெளியே வந்து காத்திருக்க கோபி எதிரே வர அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

7 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

8 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

8 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

8 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

8 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

9 hours ago