தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கமலா ஈஸ்வரியை வம்புக்கு இழுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இவர்கள் சத்தம் போடுவதை பார்த்து அங்கு வந்த ராதிகா ரெண்டு பேரும் கொஞ்சம் சண்டை போடாம இருக்கீங்களா நான் ஆனா வெளியே போயிடலாம் என்று கேட்டு இருவரையும் அமைதியாக்க ஆளுக்கொரு மூளைக்கு சென்று விடுகின்றனர். ஈஸ்வரி சாப்பிடாமல் ரூமில் படுத்துக் கொண்டே இருக்கிறார்.
மறுபக்கம் பழனிச்சாமி விமலுடன் காரில் வரும் போது அப்படியே பேச்சுக் கொடுத்து கடைசியாக இனியாவை பார்க்க எதுக்கு அவளுடைய காலேஜுக்கு போனேன் என்று கேள்வி கேட்க என் மேல் எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி செய்கிறார். அதைத்தொடர்ந்து கோபி சாப்பாடு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ராதிகா என்ன சாப்பாடு கொண்டு போய் உங்க அம்மாவுக்கு கொடுத்து சாப்பிட வேண்டும் அவங்க மதியத்தில் இருந்து ஒன்னுமே சாப்பிடல என்று சொல்கிறார்.
கமலா பச்சை தண்ணி கூட குடிக்காம இந்த ரூமுக்குள்ள போய் கிடக்கிறாங்க என்று சொல்ல கோபி ரூமுக்குள் வந்து ஈஸ்வரி எடுத்த பார்க்க ஈஸ்வரி மயக்கத்தில் கிடக்க பதறுகிறார். கமலா புது டிராமாவை ஆரம்பிச்சிடுச்சு என்று சொல்ல ராதிகா அமைதியா இரு மா என்று கோபப்படுகிறார். தண்ணீர் தெளித்தும் ஈஸ்வரி எழுந்து திரும்பவும் மயக்கம் போட்டு விட கோபி ஆம்புலன்ஸ் வரவைத்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார். ராதிகாவும் கூட ஆம்புலன்ஸ் ஏற வர கோபி நீங்க வர வேண்டாம் எங்க அம்மாவுக்கு ஏதாவது ஆச்சின்னா உங்கள் யாரையும் சும்மா விடமாட்டேன் என வார்னிங் கொடுக்கிறார்.
அதன் பிறகு செல்வி ஈஸ்வரி ஹாஸ்பிடல் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தை பாக்கியா குடும்பத்திடம் சொன்னதும் அவர்களும் பதறி அடித்து ஓடி வருகின்றனர். கோபியுடன் ஈஸ்வரிக்கு என்னாச்சு என்று அம்மா சரியா சாப்பிடாம மயங்கிட்டாங்க என்று சொல்கிறார்.
பிறகு டாக்டர் வெளியே வந்ததை பாக்யா அத்தைக்கு என்னாச்சு என்று விசாரிக்க சுகர் லோவாகி இருக்கு வேற ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்கிறார். உள்ள போய் பார்க்கலாமா என்று கேட்க இரண்டு பேர் மட்டும் போங்க என்று சொன்னதை ராமமூர்த்தி மற்றும் பாக்கியா உள்ளே சென்று ஈஸ்வரியை பார்க்க ராமமூர்த்தி ஈஸ்வரியை பார்த்து கண் கலங்குகிறார். பிறகு பாக்கியா ராமமூர்த்திக்கு ஆறுதல் சொல்லி வெளியே அழைத்து வருகிறார்.
ராதிகாவும் ஹாஸ்பிடல் வர கோபி எல்லாம் உங்களால தான்.. என் அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் உங்களுக்கு இருக்கு என்று வார்னிங் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…