தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மற்றும் கமலா என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட கோபி கொஞ்சம் அமைதியா இருங்கம்மா நீங்க தேவையில்லாம கோபப்படுறீங்க.. உங்களால இந்த பிசினஸூம் போய் நீங்க சொன்ன மாதிரி ஓட்டாண்டியா நடு தெருவுல தான் நிப்பேன் போல என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி என்னால உனக்கு எந்த பிரச்சினையும் வேண்டாம் அந்த வீட்டில் உன்னை நம்பி போக வேண்டாம் என்று எல்லாரும் சொன்னாங்க கேட்காம வந்தது என்னுடைய தப்புதான் என்று கோபப்படுகிறார்.
திரும்பவும் அந்த வீட்டுக்கு போனா மரியாதை இருக்காது அதனால நான் எங்கேயாவது போறேன் எதாவது அனாதை ஆசிரமத்துக்கு போய் உட்கார போறேன். உன்னை பெத்ததுக்கு இதுதான் நிலைமைனா அப்படியே நடக்கட்டும் என்று சூட் கேஸை தூக்கிக்கொண்டு கிளம்ப கோபி ஷாக் ஆகிறார். பிறகு தப்பு தான் மா தெரியாம அப்படி பேசிட்டு என்று மன்னிப்பு கேட்டு ஈஸ்வரியை தடுத்து நிறுத்துகிறார்.
அடுத்ததாக மறுபக்கம் பாக்கியா அமிர்தாவிடம் ஜெனியுடன் வேலைகளை பிரித்து சொல்லிவிட்டு ரெஸ்டாரன்ட் கிளம்ப எழில் ராமமூர்த்தி ஆகியோர் ஏதாவது பிரச்சனைனா சொல்லுமா உடனே வந்துருவோம் என்று சொல்லி அனுப்புகின்றனர்.
இங்கே கோபி தலையில் துண்டு போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க ராதிகா பிளாக் காபி கொண்டு வந்து கொடுத்து இது எல்லாத்துக்கும் ஒரே ஒரு தீர்வு தான் உங்க அம்மாவ உங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க. நீங்க எப்போலாம் பாக்கணும்னு தோணுதோ அப்போ எல்லாம் போய் பாத்துட்டு வாங்க என்று சொல்கிறார். ஆனால் கோபி அது முடியவே முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
பிறகு ஈஸ்வரி ரூமை படுத்திருக்க கோபி ராதிகா மேடம் எதுவும் பேசாமல் ஈஸ்வரிக்கு அவராகவே காபி போட்டு கொடுக்கிறார். ஈஸ்வரி குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க கோபி சமாதானம் செய்து குடிக்க வைக்கிறார். உனக்காக நகை எல்லாத்தையும் கழட்டி கொடுத்தவ நான். ஆனால் என்னையே நீ இப்படி சொல்லிட்டல்ல என்று வருத்தப்படுகிறார். இனிமே நான் உனக்கு என்ன நடந்தாலும் போன் பண்ண மாட்டேன். இவங்க என்னை குத்திக் கொண்டாலும் உனக்கு போன் பண்ண மாட்டேன் என்று சொல்கிறார்.
அதன் பிறகு கமலா கோபியிடம் எதையோ பேச வர போதாத ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு முறை அட்வைஸ் பண்றத நிறுத்திக்கோங்க என்று ஷாக் கொடுக்கிறார். பிறகு ராதிகா நீங்க உங்க பிசினஸ் மட்டும் பாருங்க இங்கே என்ன நடந்தாலும் அதை நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…