தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி இனிமே இங்க இருக்கக்கூடாது பாக்கியம் கோபியோட அப்பா அம்மாவான எங்கள சகிச்சிட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. வீட்டை விட்டு வெளியே போக சொன்னா நாங்க போய் தான் ஆகணும் என்று சொல்கிறார். தாத்தா ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க என்று இது வரும் கேள்வி கேட்கின்றனர்.
நீங்க அவங்களுடைய அப்பா அம்மா கிடையாது எங்களுடைய தாத்தா பாட்டி எப்பவும் எங்க கூடத்தான் இருக்கணும் என்று சொல்கின்றனர்.
அடுத்ததாக கோபி ஈஸ்வரியிடம் வந்து நாங்க கிளம்பறோம் மா இனிமே இந்த வீட்டுக்குள்ள வரவே மாட்டோம். உங்கள பாக்காம எப்படி இருக்க போறேன்னு எனக்கு தெரியல. அனாதையா நிக்க போறேன்னு நினைக்கும் போது உனக்கு நெஞ்சை வெடிச்சிடும் போல இருக்கு. பரவால்ல நெஞ்சு வெடிச்சு நான் செத்துப் போறேன் அப்பதான் மத்தவங்களும் நிம்மதியா இருப்பாங்க என்று பேச ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். கோபி ஏன்டா இப்படி எல்லாம் பேசுற நீ நெனச்சா என்ன பார்க்கலாம் என்று சொல்ல அதெல்லாம் முடியாது என்னை இந்த வீட்டுக்குள்ளது விடமாட்டாங்க என்று அழுது புலம்புகிறார்.
உங்களுக்கு என் மேல பாசம் இருக்குன்னா நீங்க என் கூட வந்துடுங்கம்மா என்று சொல்லி கூப்பிட ஈஸ்வரி அது எப்படிடா முடியும் என்று கேள்வி கேட்கிறார். நீங்க என் கூட வரலைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என்று செக் மை வைக்க ஈஸ்வரி வேறு வழி இல்லாமல் நான் உன் கூட வரேன் என வாக்கு கொடுக்க கோபி சந்தோஷம் அடைகிறார்.
பிறகு எழிலும் பாக்யாவும் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்த கோபி இன்னும் கொஞ்ச நேரத்துல யாரு அதிர்ச்சியாகப் போறா யாருக்கு ஆப்பு என்பது தெரியும் என்று பேசுகிறார். உனக்கு ஒரு பிரச்சனைன்னு நான் வந்து நின்னேன் ஆனால் எனக்கு ஒரு பிரச்சனைனு வரும்போது நீ என் கூட நிற்கல இன்று கணேஷ் பிரச்சினை பற்றி பேச எழில் அது உங்களுடைய கடமை என்று பதிலடி கொடுக்கிறார்.
பிறகு பாக்யாவுக்கு ரெஸ்டாரண்டில் ஏதோ அவசரம் என மெசேஜ் வர அவர் கிளம்பி செல்கிறார். கோபி இன்னும் பத்து நிமிஷத்துல இந்த வீட்டுல பூகம்பம் வெடிக்கும். அப்போ உங்க எல்லாருக்கும் இந்த போக்கு யாருமே தெரியும் என்று மைண்ட் வாய்ஸில் பேசிக் கொள்கிறார்.
அதன் பிறகு மேலே வந்த கோபி ராதிகாவிடம் அம்மா அம்மா தான் என்று சொல்லி சந்தோஷப்பட ராதிகா நான் என்ன சித்தி நான் சொன்னேன் என்று சொல்ல சூப்பர் பஞ்ச் டயலாக் சிரிக்கிறார். அதன் பிறகு நம்ம கூட அம்மாவும் வரப்போறாங்க என்று சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். ஒரு பிரச்சனை வேணாம்னு தான் இங்க இருந்து கிளம்புறோம் இன்னொரு பிரச்சனைகள் கூடவே கூட்டிட்டு போகணுமா என்று கோபி எங்க அம்மா ஒன்னும் பிரச்சனை கிடையாது அவங்க நம்பர் ரெண்டு பேருக்காக தான் வராங்க என்று பேச ராதிகா அதெல்லாம் செட் ஆகாது என்பது போல சொல்கிறார்.
அந்த வீட்டில நீ உங்க அம்மா எல்லாரும் இருக்கீங்க நான் மட்டும்தான் தனியா இருக்கணுமா எங்க அம்மா என்கூட தான் இருப்பாங்க ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…