பாக்யா சொன்ன வார்த்தை, ஜெனி எடுத்த முடிவு,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி‌. இன்றைய எபிசோடில் பழனிச்சாமி வீட்டுக்கு வந்த பாக்கியா உங்களுக்கு புடிச்ச எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, இறால் தொக்கையும் கொண்டு வந்திருக்கேன் என்று கொடுக்க வாசனையே கம கமன்னு வருது என்று பழனிச்சாமி ‌சொல்கிறார். சார் உங்களுக்கும் சேர்த்து தான கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறுகிறார்.

இதையடுத்து பாக்கியா ரெஸ்டாரன்ட் போக வேண்டும் என்று கேப் புக் பண்ண பழனிச்சாமியின் அக்கா எங்க வீட்டுக்கு வந்துட்டு எதுக்கு கேப்ல போறீங்க, இங்கதான் இத்தனை கார் இருக்கே என்று சொல்லி பழனிச்சாமி அனுப்பி வைக்க பழனிச்சாமி காரில் பாக்கியாவிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன என்று கேட்டுக் கொண்டே செல்கிறார். பாக்யா இதுவரைக்கும் என்கிட்ட இப்படி யாரும் கேட்டதே கிடையாது. எங்கம்மா பால் கொழுக்கட்டை செஞ்சு கொடுப்பாங்க அது எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த மாதிரி நான் எவ்வளவோ முறை செஞ்சோம் அந்த டேஸ்ட் வரவே இல்ல என்று சொல்கிறார்.

பழனிச்சாமி மனசுக்குள் கண்டிப்பா உங்களுக்கு புடிச்ச மாதிரி அதே டேஸ்ட்ல பால் கொழுக்கட்டை செஞ்சு தருவேன் என்று நினைத்துக் கொள்கிறார். இங்கே ஹோட்டலில் அமுதாவும் ஏழும் ஒன்றாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த செல்வி ஹோட்டல்ல எல்லாமே காதல் ஜோடியா இருக்கு இங்க நீங்களும் காதல் ஜோடியா நின்னுக்கிட்டு இருக்கீங்க என்று கலாய்க்கிறார்.

பிறகு பாக்கியாவும் பழனிச்சாமியும் ஜோடியாக வந்து இறங்க அதை பார்த்து தெரிந்து இன்னொரு காதல் ஜோடி வந்துடுச்சு என்று சொல்கிறார். மேலும் எழிலிடம் தம்பி அக்காவுக்கும் அண்ணனுக்கும் பிடிச்சிருந்தா நீங்க என்ன பண்ணுவீங்க என்று கேட்க கல்யாணம் பண்ணி வச்சிடுவேன் என்று எழில் சொல்கிறார்.

பழனிச்சாமி உள்ளே வந்ததும் பாக்கியா நீங்க பேசிட்டு இருங்க என்று கிச்சனுக்குள் செல்ல நீங்க வரதுக்கு முன்னாடி தான் எழில் தம்பி உங்களுக்கும் அக்காவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேசிட்டு இருந்துச்சு என்று உண்மையை உளறி கொட்ட பழனிச்சாமி அதிர்ந்து போய் நிற்கிறார்.

அடுத்ததாக பாக்கியா, செழியன் மற்றும் தாத்தா ராமமூர்த்தி ஆகியோர் ஜெனியின் வீட்டுக்கு வந்து குழந்தைக்கு பேர் வைக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்க ஜோசப் கண்டிப்பா நாங்க வர மாட்டோம் என அதிர்ச்சி கொடுக்கிறார். பாக்யா பழசு எல்லாம் மறந்துட்டு இரண்டு குடும்பமும் ஒன்னா தேதி இந்த நிகழ்ச்சியை நடத்தும் என்று சொல்கிறார். குழந்தைக்கு என்ன பெயர் வைக்க போறீங்க உங்க முறைப்படி தானே பேர் வைக்க போறீங்க என்றெல்லாம் சொல்ல நாங்க கோவில்ல வைக்கல வீட்ல தான் வச்சிருக்கோம் இதை பங்ஷன் முடிஞ்ச பிறகு நீங்கள் சர்ச்சை கூட்டிட்டு போய் வழக்கப்படி கூட பெயர் வைங்க. எங்க வீட்ல கோவிலுக்கு கூட்டிட்டு போகட்டும் அதுல ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி கூப்பிட்டு கிளம்பி வருகிறார்.

பிறகு ஜெனியின் அம்மா மரியம் எதுக்கு ஜோசப் இப்படி பேசினீங்க நாம எல்லாத்தையும் மறந்துட்டு நம்ம வீட்டு குழந்தைக்காக இந்த ஃபங்சனுக்கு போய் தான் ஆகணும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

1 day ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

1 day ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

1 day ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

2 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

2 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

2 days ago