பாக்யா சொன்ன வார்த்தை,புலம்பும் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமி வாங்கி வந்து கொடுத்த புக்குக்காக பாக்கியா பணம் கொடுப்பதாக சொல்ல பழனிச்சாமி அதெல்லாம் வேண்டாம் அன்புக்கு விலை பேசாதீங்க என்று சொல்கிறார்.

அடுத்ததாக ராதிகா அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க கோபி வீட்டுக்கு வர வாழ்த்துக்கள் சொல்லும் கமலா இந்த குழந்தையை பெத்துக்கங்க என்று சொல்கிறார். உங்க புள்ளைங்க யாரும் உங்களுக்கு சப்போர்ட்டா நிக்கல எல்லாரும் அந்த பாக்கியவருக்கு சப்போர்ட்டா தான் இருக்காங்க. உங்களுக்கு நீ ஒரு குழந்தை இருந்தா உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்து நிற்கும் என்று சொல்கிறார். உங்க அம்மாகிட்ட விஷயத்தை சொல்லிட்டீங்களா என்று கேட்க கோபி இல்லை என்று சொன்ன எப்ப சொல்ல போறீங்க என்று கேட்கிறார். கூடிய சீக்கிரம் சொல்லிடுவேன் என்று கோபி சொல்ல ஏதாவது பிரச்சனைனா சொல்லுங்க நான் வந்து பேசிக்கிறேன் என்று சொல்கிறார்.

பிறகு கோபியின் ராதிகாவும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வருகின்றனர். கோபி ராதிகாவை கை தாங்கலாக பிடித்து வர ஈஸ்வரி நீ எதுக்குடா அவளை புடிச்சுட்டு நடந்து வர என்று கேட்கிறார். அவளுக்கென்ன இன்னுமா உடம்பு சரியாகல என்று கேட்க ராதிகா இப்ப பரவால்ல என்று சொல்கிறார். பிறகு ஜெனி வாமிட் நின்னுடுச்சா என்று கேட்க கோபி அது அவளது சீக்கிரம் நிக்காது திடீர்னு வரும் என எதையோ உளறுகிறார். நீ என்னடா ஏதோ உளறிட்டு இருக்க என்று ஈஸ்வரி கேட்க உளறுறேனா அது எனக்கே தெரியுது என்று சொல்கிறார். ராதிகாவுக்கு உடம்பு சரியாமல் போகவே இப்படி ஆகிவிட்டது என்று சமாளிக்கிறார்.

அதன் பிறகு ராதிகா எனக்கு டயர்டா இருக்கு என்று மேலே செல்ல கோபி பொறுமையா என்று பிடித்துக் கொண்டு படிக்கட்டு ஏற ஈஸ்வரி கோபியை கூப்பிட்ட கேள்வி கேட்க கோபி எதையோ சொல்லி சமாளித்து எஸ்கேப் ஆகிறார். நீ அவனை கவனிச்சியா பாத்தியா என்று கேட்க நான் எதுக்கத்தை உங்க புள்ளைய கவனிக்கணும் என்று பதில் கொடுக்கிறார். பிறகு ரெஸ்டாரன்ட் முதல் வாரம் லாபம் வரல நஷ்டத்தில் தான் போச்சு ஆனால் இப்போ ஓரளவுக்கு லாபம் வந்திருக்கு என்று சொல்கிறார். ஜெனி வாழ்த்து சொல்ல பாக்கியா நன்றி சொல்கிறார். ஈஸ்வரி அமிர்தாவிடம் பேசாமல் இருக்க எழிலிடம் சொல்லி வருத்தப்படுகிறார். எழில் எனக்கு சில ஆசைகள் இருக்கு அதெல்லாம் நடந்த பிறகு குழந்தை பெத்துக்கலாம். இந்த வீட்ல உன் கூட பேச நிறைய பேர் இருக்காங்க, பேசாதவங்க பத்தி எல்லாம் கவலை படாத என சொல்கிறார். பிறகு அமிர்தாவை வெளியே அழைத்து கொண்டு செல்கிறார்.

அதைத்தொடர்ந்து பழனிச்சாமி விதவிதமான சட்டைகளில் போட்டோ எடுத்து அதை whatsapp ஸ்டேட்டஸ் ஆக வைக்கிறார். பாக்கியா பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டேட்ஸ் வைக்க இனியா அதைப் பார்த்து பாக்கியாவிடம் சொல்ல பாக்கியாவும் போட்டோக்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார். இத்‌துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

14 hours ago

பிரம்மாண்டமாய் புத்தம் புது பொலிவுடன் புதிய கலெக்ஷனில் துணிகளை அள்ளிக்கொள்ள வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வாங்க..!

நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ்…

14 hours ago

எஸ் டி ஆர் 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம்…

19 hours ago

எஸ் டி ஆர் 49 : டைட்டில் என்ன தெரியுமா? படக்குழு அறிவிப்பு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து…

21 hours ago

முத்து எடுத்த முடிவு, பார்வதி இடம் விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…

21 hours ago

கோபமாக பேசிய வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…

22 hours ago