குடும்பத்தாரிடம் உண்மையை உடைத்த பாக்கியா.. ஷாக்கான கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்க ஈஸ்வரி அவன் இப்போதான் ஹாஸ்பிடலில் இருந்து வந்திருக்கான் அவன நிக்க வச்சு கேள்வி கேட்கிறாய் என சத்தம் போட்டு இருக்கிறார். அவர் அதிர்ச்சியில் தான் மயக்கமானார் அவர் உடம்பிற்கு எந்த பிரச்சினையும் இல்லை என சொன்னாங்கல என பாக்கியா பதில் கூறுகிறார்.

பிறகு ஹாஸ்பிடல்ல இவருக்கு பணம் கட்டியது யாரு என கேட்க அதான் அவருடைய வைஃப்னு சொன்னாங்களே, அப்புறம் என்ன என்ன செழியன் சொல்ல வைப்-னு சொன்னாங்க ஆனா பாக்கியலட்சுமி என்று சொன்னாங்களா என கேட்கிறார்.

இதுவரைக்கும் என் வாழ்க்கையில எது நடக்க கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தன அது நடந்துடுச்சு. இவர் மேல எனக்கு சந்தேகம் வந்து ரொம்ப நாளாச்சு ஆனா அது எதுவும் உண்மையாக இருக்கக் கூடாது இது குடும்பத்தோட சந்தோஷம் கெட்டுப் போகக்கூடாது என ஒவ்வொரு நிமிஷமும் நான் வேண்டிக்கிட்டு இருந்தேன் ஆனா அது நடந்துச்சு. ஹாஸ்பிடல்ல இவரை பார்க்க போனா எனக்கு முன்னாடியே இவரு வர சொல்லி இருந்த ஒருத்தவங்க வந்து பணம் கட்டி இருக்காங்க, நர்ஸ் கிட்ட இவர் பார்க்கணும்னு பொய் கேட்டா நீங்க யாரு என கேட்டாங்க நான் அவருடைய மனைவின்னு சொன்னா.. நீங்க மனைவின்னா அப்போ அவங்க யாரு என கேவலமா பார்த்தாங்க.

சரி இவர் கண் முழிச்சதும் பார்க்க போலாமே பண்ணா அவங்க இருக்கிறாங்கன்னு சொன்னாங்க. ஒரு மனைவி பார்க்கக் கூடாது விஷயத்தை நான் ஹாஸ்பிடல்ல பார்த்தேன். கதவு திறந்தால் இவர் அவங்களோட கைய புடிச்சுகிட்டு என் வாழ்க்கையை விட்டு போயிடாத நீ இல்லன்னா நான் செத்துப் போயிடுவேன்னு சொல்லிட்டு இருந்தாரு என சொல்ல ஈஸ்வரி நீ ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டு பேசாத என திட்டுகிறார். இத்தனை வருஷம் கோபியுடன் வாழ்கிற அவன் எப்படி உனக்கு தெரியாதா என சொல்ல இவ்வளவு நாளா கற்பனையில் தான் வாழ்ந்தேன் என பாக்யா கூறுகிறார்.

பிறகு எழிலும் அப்பா தப்பு பண்ணி இருக்காரு அது எனக்கு ஏற்கனவே தெரியும் அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க கஷ்டப்படுவாங்கன்னு தான் நான் யார்கிட்டயும் சொல்லாம என் மனசுக்குள்ளே போட்டு நொந்து கிட்டு இருந்தேன். இப்போ தான் அம்மாவுக்கு தெரிஞ்சிருச்சு, இனிமே எதுக்கு பொறுமையாக இருக்கணும் என சொல்ல ஈஸ்வரி அது சரியா கோபி எதுவும் பேச முடியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

11 hours ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

11 hours ago

இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…

11 hours ago

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…

12 hours ago

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…

14 hours ago

திரையரங்குகளில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…

15 hours ago