ஈஸ்வரியை எதிர்த்து பேசிய எழில்,அதிர்ச்சியில் கோபி,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா, ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி என மூவரும் பேசிக்கொண்டிருக்க மேலே இருந்து கீழே இறங்கி வரும் எழில் ஈஸ்வரியிடம் அமிர்தா கிட்ட என்ன கேட்டீங்க என்று கேள்வி கேட்க ஈஸ்வரி எல்லார் வீட்டிலும் கேட்கிறதா தான் கேட்டேன் அதுக்குள்ள உன் பொண்டாட்டி கிட்ட வந்து பத்தி வச்சுட்டாளா என்று அமிர்தாவை பற்றி தப்பாக பேச எழில் குழந்தையை பற்றி நீங்க ஏன் அமிர்தா கிட்ட கேட்கறீங்க.? இனிமே அவகிட்ட இத பத்தி கேட்காதீங்க என்று சொல்கிறார்.

உடனே ஈஸ்வரி ஏன் நான் கேட்க கூடாது என்று கேள்வி கேட்க நீங்க என்கிட்ட என்ன வேணா கேளுங்க என்னை அடிங்க திட்டுங்க இல்ல கோச்சிக்க கூட செய்யுங்கள். ஆனா அமிர்தா கிட்ட இத பத்தி இனிமே கேட்காதீங்க என்று சொல்கிறார். ஆனாலும் ஈஸ்வரி விடாமல் பேசிக்கொண்டிருக்க குழந்தை விஷயத்துல முடிவெடுக்க வேண்டியது நானும் அமுதாவும் தான் நீங்க அந்த தலையிடாதீங்க என அதிர்ச்சி கொடுக்கிறார். நான் இந்த வீட்ல இருந்தா அமிர்தாவும் இருப்பா என்று சொல்லி எழில் நகர்ந்து செல்ல ஈஸ்வரி உடைந்து உட்காருகிறார்.

உடனே பாக்யாவை பிடித்து என்ன புள்ள வளைத்து வச்சிருக்க என்று சத்தம் போட நான் நல்லா தான் வளர்த்து இருக்கேன் உங்க பையனுக்கு நீங்க சொல்லிக் கொடுக்காததை எல்லாம் நான் சொல்லிக் கொடுத்து வளர்த்து இருக்கேன் என்று பாக்கியாவும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

இப்ப எல்லாம் காலம் மாறிப்போச்சு யாரும் கல்யாணமானது பத்து மாசத்துல புள்ளைய பெத்துக்கறது கிடையாது அவங்களுக்கு எப்ப தோணுதோ அப்பதான் பெத்துக்குறாங்க. என் பையன் சரியா தான் நடந்துகிட்டு இருக்கான் யாரோ சொல்றத கேட்டு பொண்டாட்டி கிட்ட சண்டை போடாமல் அவனுடைய பொண்டாட்டிக்காக நிக்கிறத பார்க்கும்போது எனக்கு சந்தோஷமா தான் இருக்கு. அவன் சரியா இருக்கிறதுனால நான் அவன் பக்கம்தான் நிப்பேன் என்று பதில் சொல்ல ஈஸ்வரி கோபித்துக் கொண்டு ரூமுக்கு செல்கிறார். பிறகு ராமமூர்த்தியிடம் நான் எதுவும் தப்பா பேசிடலையே? என்று கேட்க நீ சரியாதாம்மா பேசுண, ஈஸ்வரி தான் எல்லார் மேலேயும் இருக்கிற பாசத்துல தேவையில்லாத விஷயத்தை திரும்பத் திரும்ப பேசிட்டு இருக்கா என்று சொல்லி அவரும் ரூமுக்கு செல்கிறார்.

அடுத்ததாக ஹோட்டல் ரெஸ்டாரன்ட் பார்க்க எங்க இருக்காங்க காலி இட ஒனரை ஹோட்டலுக்கு வரவைத்து பேச அவர் 30 ஆயிரம் வாடகை கேட்க பழனிச்சாமி பத்தாயிரத்துக்கு மேல கொடுக்க முடியாது என பேசி ஒரு வழியாக சம்மதிக்க வைக்க பாக்கியா சந்தோசப்படுகிறார்.

மறுபக்கம் கோபி 150 சாப்பாடு ஆர்டர் உடன் ரெஸ்டாரண்ட் வர வேலை செய்பவர்கள் எல்லாம் அப்படியே நின்று கொண்டிருக்க ஏன் வேலை செய்யாம நின்னுட்டு இருக்கீங்க என்று கேட்க செப் எங்கே என்று கேட்க அவர் லீவ் என்று சொன்னது கோபி அதிர்ச்சி அடைகிறார்.

மற்றவர்களைப் போய் சமைக்க சொன்ன அவர்கள் எங்களுக்கு சமைக்கத் தெரியாது என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர். பிறகு ராதிகாவுக்கு போன் போட்டு என்ன செய்வது எனப் புலம்ப ராதிகா என்னால ஒன்னும் பண்ண முடியாது என்று திட்டி போனை வைக்கிறார். திரும்பவும் போன் போட்டு செஃப் இல்லன்னு சொல்லிட்டு எங்க ஆபீஸ்க்கு அனுப்ப வேண்டிய சாப்பாட்ட அனுப்பாம இருக்காதீங்க டைமிங் கரெக்டா வந்து சேரனும் என வார்னிங் கொடுத்து போனை வைக்கிறார்.

இதையடுத்து கோபி செய்வது அறியாது நிற்கிறார். பிறகு ஈஸ்வரிக்கு போன் போட்டு நான் பெரிய பிரச்சனை இல்ல இருக்கு செப் லீவு என நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல ஈஸ்வரியும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…

5 hours ago

வெளியில் பேசும் கதைகளை கேட்க எனக்கு டைம் இல்லை.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!

நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…

5 hours ago

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…

5 hours ago

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…

5 hours ago

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

5 hours ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

5 hours ago