தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி செழியனிடம் எங்கம்மா உன்ன பத்தி யோசிக்கல ஜெனி பத்தி தான் யோசிக்கிறா குழந்தையை எதுக்கு தூக்கி கொடுக்கணும் என்று சொல்ல ராதிகா இந்த விஷயத்துல பாக்கியா பண்ணது தான் சரி என்று சொல்ல கோபி இவ்வளவு நேரம் அவளை பிடித்து திட்டிட்டு இருந்த இப்ப என்ன அவளுக்கு சப்போர்ட் பண்ற என்று கேட்க ராஜி விஷயத்துல அவங்க பண்ணது பெரிய தப்பு ஆனா ஜெனி விஷயத்துல அவங்க பண்ணது தான் சரி என்று சொல்லி அங்கிருந்து எழுந்து செல்கிறார்.
பிறகு கோபி இனிமேல் எதுவாக இருந்தாலும் என்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணு என செழியனிடம் கூறுகிறார். அடுத்து மறுநாள் கோபி, ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் பாக்யாவுக்காக காத்திருக்க பாக்யாவும் எழிலும் வீட்டுக்கு வருகின்றனர். இருவரும் வீட்டுக்குள் நுழைய நில்லு பாக்கியா என தடுத்து நிறுத்துகிறார் ஈஸ்வரி.
எங்கிருந்து வர என்று கேட்க திருச்செந்தூர் என்று பொய் சொல்ல கோபி குன்னக்குடியில் தான் இருந்தான் அவன் எல்லா விஷயத்தையும் சொல்லி இருப்பானு கூட தெரியாம திருச்செந்தூர்னு எப்படி பொய் சொல்றா பாருங்க என்று கோபப்படுகிறார். யாரோ எப்படியோ போறாங்க உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை நீ எதுக்கு அடுத்தவங்க குடும்ப விஷயத்துல தலையை கொடுக்கணும் என்று ராஜி விஷயத்தைப் பற்றி பேசி கோபப்படுகிறார்.
கோபி அவர் பங்குக்கு இவ்வளவு நாளா இவ பெரிய தொழிலதிபர்னு மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தா இப்போ சமூக சேவையும் செய்ய ஆரம்பிச்சுட்டா, உங்களுக்கு தெரிந்து யாருக்காவது கல்யாணமாகாமல் இருந்தா சொல்லுங்க என்று ஈஸ்வரி இடம் கொளுத்தி போடுகிறார். ராமமூர்த்தியும் நீ பண்ணது தப்புன்னா, பொண்ண பெத்தவங்க சாபம் விட்டா நாம நல்லா இருக்க முடியாது என்று கூறுகிறார்.
ராதிகாவும் ராஜி விஷயத்தில் நீங்க என்ன பண்ணி இருக்கணும் ஒன்னு வீட்டுக்கு தெரியப்படுத்தி இருக்கும் இல்ல படிக்கிற பசங்களுக்கு இதெல்லாம் வேணாம்னு அட்வைஸ் பண்ணி அனுப்பி இருக்கணும் என்று கோபப்படுகிறார். எல்லோரும் மாறி மாறி ரவுண்டு கட்டி பேச பாக்கியா நான் பண்ணது பெரிய தப்புதான் மன்னிச்சிடுங்க தெரியாம பண்ணிட்டேன் என்று கையெடுத்து கும்பிட்டு எல்லாரிடமும் சாரி கேட்டு உள்ளே சென்று விடுகிறார்.
பிறகு எழில் உன் பக்கம் நியாயத்தை பேசுவேனு பார்த்தா சரண்டர் ஆகிட்ட என்று கேட்க வேற என்ன பண்ண முடியும் அவங்க பக்கத்தில் இருந்து யோசிச்சு பார்க்கும்போது அவங்களோட கோபமும் நியாயம் தானே என்று சொல்கிறார். பிறகு இனியா வர நீ பண்ண விஷயத்தை சொன்னா என் பிரெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப பாராட்டுனாங்க என்று சொல்ல பாக்கியா நீ இந்த மாதிரி எல்லாம் பண்ண கூடாது என்று அட்வைஸ் பண்ணுகிறார். எழில் நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போன பிறகு உனக்கு யாராவது புடிச்சி இருந்து அவன் நல்ல பையனா இருந்தா உன் பக்கம் தான் நிற்பேன் என்று சொல்ல அதெல்லாம் பெரிய ப்ராசஸ் நான் நீங்கள் பார்க்கிற பையனையே கட்டிக்கிறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…