தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமியை சந்தித்து வீட்டில் நடந்த விஷயத்தை மன்னிப்பு கேட்க அவர் என்னதான் நண்பர்களாக இருந்தாலும் முன்ன பின்ன சொல்லிக்காம சந்திக்கக் கூடாது என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று சொல்ல பாக்கியா சார் அப்படியெல்லாம் இல்ல நீங்க அவர் பேசியதால் நீங்க வருத்தப்பட்டு இருக்கீங்கன்னு தெரியும் அதனால தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன் என கூறுகிறார்.
மறுபக்கம் கோபி தன்னுடைய நண்பரிடம் ராதிகாவும் பாக்யாவுடன் சேர்ந்து தன்னை அவமானப்படுத்தும் விஷயங்களை சொல்லி புலம்புகிறார். அதேபோல் கிரெடிட் கார்டுக்கு பணம் கட்ட சொல்லி தன்னை டார்ச்சர் செய்யும் விஷயத்தையும் சொல்லி புலம்ப அவருடைய நண்பன் என்னுடைய பிரண்டு ஒருத்தன் இருக்கான் அவன் என்கிட்ட பணத்தை வாங்கிட்டு திருப்பி தர மாட்டேன் கேட்டாலும் கொடுக்க மாட்டேன்னு சொல்றேன் என்று கோபியை பற்றி சொல்கிறார்.
அதனைத் தொடர்ந்து பாக்கியா செல்வியுடன் கேண்டீன் கான்ட்ராக்ட் பற்றி தெரிந்து கொள்ள அங்கு எல்லோரும் பொருட்காட்சி நடக்காது போல கேன்சல் பண்ணிடுவாங்க என்று பேசிக் கொண்டிருக்க அதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். ஆபீஸில் மீட்டிங்கில் பேசிக்கொண்டு இருக்கோம். நாளைக்கு தான் அது பற்றி முழுசா தெரியும் என சொல்லி அனுப்புகின்றனர்.
பாக்கியா வரும் வழியில் கணேஷ் எதிரே வந்து வண்டியை நிறுத்தி இன்னும் நீங்க சொன்ன டைம்ல 12 நாள் தான் மீதி இருக்கு அதுக்குள்ள நீங்க பிரச்சனையை தீர்த்து வைக்கணும் இல்லன்னா நான் என்ன பண்ணுவது என்று எனக்கே தெரியாது என வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறார்.
பிறகு செல்வியும் பாக்கியாவும் சேர்ந்து காண்ட்ராக்ட் லைசென்ஸ் கொடுத்தவரை சந்தித்து ஒருவேளை பொருட்காட்சி நடக்கலன்னு உங்களுக்கு கவர்மெண்ட் கொடுக்கிற ஒரு லட்சம் ரூபாய் பணத்தை என்கிட்ட கொடுத்துருவீங்களா என்று கேட்க அதெல்லாம் ஒரு ரூபாய் கூட கொடுக்க முடியாது லாபமாக இருந்தாலும் நஷ்டமாக இருந்தாலும் அதை நீங்கதான் பார்த்துக்கணும் திரும்பவும் இது பற்றி பேச என்ன கூப்பிடாதீங்க என அதிர்ச்சி கொடுத்து விட்டு கிளம்பி செல்கிறார்.
பிறகு செல்வி என்னக்கா இப்படி சொல்றாரு இப்ப என்ன பண்றது என்று கேட்க எதுவா இருந்தாலும் துணிந்து செய்து தான் ஆகணும். கேட்டரிங் நடக்கணும்னு இருந்தா நடக்கும் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…
Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…
I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy
Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள்…