ஜெனி அம்மா சொன்ன வார்த்தை. ஷாக்கான பாக்கியா. இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலின் இன்றைய எபிசோட்டில் செழியன் ஜெனியிடம் சென்று நான் பண்ணது பெரிய தப்பு தான் எனக்கு ஜெனியை பாக்கணும் குழந்தையை பாக்கணும் அவ எப்படி இருக்கான்னு நீ போன் பண்ணி பேசு டா என்று சொல்ல எழில் செழியனை பிடித்து திட்டி விடுகிறார்.

அது மட்டுமின்றி செழியன் என் கூட ஜெனி வீட்டுக்கு வா அவ கிட்ட போய் பேசிட்டு வரலாம் என்று கூப்பிட எழில் நான் வரமாட்டேன் என கூறிவிடுகிறார். பிறகு செழியன் ஜெனி வீட்டுக்கு வந்து கதவை தட்ட ஜெனி செழியனை பார்த்ததும் கதவை சாற்றி விடுகிறார். அதன் பிறகு செழியன் மீண்டும் மீண்டும் ஜெனி கிட்ட பேசணும் என அழுதவாறு கதவைத் தட்டிக் கொண்டே இருக்க அவரது அம்மா கதவை திறந்து அவர் கிட்ட பேச மாட்டா, அவளே பேசணும்னு நினைச்சாலும் நான் பேச விட மாட்டேன் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

இங்கே பாக்கியா ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியை சாப்பிட கூப்பிட்டுக் கொண்டிருக்க அவர்கள் இருவரும் சாப்பாடு ஒன்றும் வேண்டாம் என சொல்லிக் கொண்டிருக்கும் போது ஜெனி அம்மா போன் செய்து செழியன் இங்க வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு என கோபப்படுகிறார். ஈஸ்வரி ஜெனியை பார்க்க விட வேண்டியது தானே என்று சொல்ல ஜெனி அம்மா கோபப்பட ஈஸ்வரி இப்ப எதுக்கு கோபப்படுறீங்க என ஆவேசப்படுகிறார்.

நானா இருக்கவே கோபப்படுகிறேன் வேற யாராவது இருந்திருந்தால் போலீஸ் ஸ்டேஷன் போயிருப்பாங்க என அதிர்ச்சி கொடுத்து ஃபோனை வைக்கிறார். பிறகு கோபி நான் போய் செழியனை கூட்டிட்டு வரேன் என்று சொல்லி கிளம்பி வருகிறார். இதைக் கேட்ட ராதிகா நீங்க பண்றது ரொம்ப தப்பு என ஈஸ்வரியிடம் வாக்குவாதம் செய்ய ராமமூர்த்தி நீ வேற ஏன்மா என ரூமுக்கு அனுப்பி வைக்கிறார்.

அடுத்து ஈஸ்வரி பாக்யாவை திட்ட அம்மாவுக்கு ஆதரவாக பேசி அவரை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் கோபி செழியனை அழைத்து வர செழியன் அம்மா ஜெனி கிட்ட போய் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்க சொல்லி எத்தனையோ முறை என்னை வார்ன் பண்ணாங்க, இப்போ என்னால அவங்களுக்கும் பிரச்சனை என உண்மைகளை உடைக்கிறார்.

இங்கே பாக்கியா ஜெனிக்கு போன் செய்ய ஜெனி எடுக்காத காரணத்தினால் அவருடைய அம்மாவுக்கு போன் செய்ய உங்களுக்கு வந்த அதே நிலைமை தான் என் பொண்ணுக்கும் வந்திருக்கு என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

கம்ருதீன் சொன்ன வார்த்தை,ரம்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

1 hour ago

பைசன்: முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…

2 hours ago

முத்து மீனாவுக்கு வந்த சந்தேகம், ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

2 hours ago

இந்த வாரம் சிறைக்குச் செல்ல போகும் இரண்டு போட்டியாளர்கள் யார்? வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

4 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

5 hours ago

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

18 hours ago