பாக்யாவை பற்றி தரக்குறைவாக பேசிய கோபி. கோபத்தில் குடும்பத்தினர். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் எழில் ஈஸ்வரியின் காலை அமுக்கிக் கொண்டிருக்கும் போது பாக்யா பழனிசாமி வீட்டிற்கு சென்று வந்த விஷயத்தையும் அவரது அம்மா அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என வருத்தப்பட்ட விஷயத்தை சொல்கிறார். மேலும் நாம அவருக்கு ஒரு பொண்ணு பார்க்கலாமா என கேட்க ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் கண்டிப்பாக பார்க்கலாம் என்று சொல்கின்றனர்.

கோபி பாக்கியாவை நினைத்து டென்ஷன் ஆக இருக்க ராதிகா எனக்குன்னு யார் இருக்கா என்ன யார் வேணாலும் என்ன வேணாலும் சொல்லலாம் என பேச இதனால் கோபி நீ வா ராதிகா நான் அம்மாகிட்ட பேசுறேன் என கீழே வருகிறார்.

கீழே வந்த கோபி எதுக்குமா ராதிகாவை திட்டிக்கிட்டே இருக்கீங்க என பேச ஆரம்பிச்சு பாக்கியா என்ன அவ்வளவு ஒழுக்கமா அவ்வளவு தலையில தூக்கி வெச்சிட்டு ஆடறீங்க, அவ முடி கட் பண்ணிக்கிட்டு மாடர்ன் டிரஸ் போட்டுக்கிட்டு கிளாஸ் போறதெல்லாம் அந்த பழனிச்சாமி கிட்ட பேசுறதுக்கு தான். அவர் எதுக்கு அடிக்கடி எங்க வீட்டுக்கு வரணும் இவை எதுக்கு அவன் கிட்ட சிரிச்சு பேசணும், இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல என சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைந்து நான் யார் கிட்ட பேசினா உங்களுக்கு என்ன என கேள்வி எழுப்புகிறார். ‌‌

நீ என் வீட்ல இருக்க நான் கேள்வி கேட்க தான் செய்வேன் என கோபி சொல்ல எழில் கோபப்படுகிறார். இன்னைக்கு இவ எங்க போய் இருந்தா தெரியுமா அந்த பழனிச்சாமி வீட்டுக்கு போய் இருந்தா, நான் எதார்த்தமா அந்த வழியா போனா ரெண்டு பேரும் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்காங்க.. ஒழுக்கம் கெட்டவ என பாக்யாவை திட்ட எழில் சட்டையைப் பிடித்து உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை என பேச மேலே இருந்து கீழே வந்த செழியன் கோபியை அடிக்க கை ஓங்க கோபி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை யார பத்தி எங்க வந்து என்ன பேசுறீங்க என செழியன் ஆவேச பட எழில் அவன் கையைத்தான் ஓங்குனான், நான் வாயை உடைத்து விடுவேன் என வார்னிங் கொடுக்கிறார். என்ன என் புள்ளைங்க எல்லாம் கூட்டு சேர்த்துகிட்டு என்னையே அடிக்க வைக்கிறியா என கோபி சத்தம் போட இந்த மாதிரி நீங்க என்னை கேள்வி கேட்கக்கூடாது நான் உங்களை கேள்வி கேட்கக்கூடாது என்று தான் சட்டப்படி விவாகரத்து வாங்கி இருப்போம்.

என்ன பத்தி இப்படி பேசுறது இதுவே கடைசியா இருக்கணும், நல்ல புத்தி இருந்தா தான் நல்லவிதமா யோசிக்க தோணும் உங்களுக்கு தான் அது இல்லையே உங்கள மாதிரி தான் யோசிக்க தோணும் என பதிலடி கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் இன்னொரு முறை இப்படி பேசினீங்க ஏன் புள்ளைங்க கை ஓங்குற வரைக்கும் நான் பார்த்துக்கிட்டு இருக்க மாட்டேன் என எச்சரித்து விட்டு உள்ளே செல்கிறார்.

பிறகு ஈஸ்வரி உனக்கு இதெல்லாம் தேவையா இவ சொல்லிக் கொடுத்து கூட்டிட்டு வந்தாளா என கேள்வி கேட்க ராதிகா நான் எதுவும் சொல்லல என கோபப்படுகிறார். இந்த வீட்ல எனக்கு இது தான் மரியாதை என ராதிகா சொல்ல ராமமூர்த்தி மரியாதை தானா வரணும் கேட்டு வரக்கூடாது. அது நீங்க நடந்துக்கிற விதத்துல கிடைக்கும். இப்படி தேவையில்லாமல் கொளுத்தி விட்டு குளிர் காய பார்க்காதீங்க என எச்சரிக்கிறார்.

கோபி செழியன் அடிக்க பாய்ந்ததை நினைத்து அதிர்ச்சியோடு மேலே செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

12 hours ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

12 hours ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

12 hours ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

18 hours ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

18 hours ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

18 hours ago