கோபி,ராதிகா இடையே ஏற்பட்ட வாக்குவாதம். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி மற்றும் ராதிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட கோபி உன்கிட்ட பேசி புரிய வைக்க முடியாது நீ பைத்தியக்காரனாக்கிடுவ என கோபப்படுகிறார்.

அதோடு கோபி மயூவை இங்கேயே கூட்டி வந்துவிடலாம் போதுமா என சொல்ல நான் வந்து கஷ்டப்படுறது போதாதா? அவளும் கஷ்டப்படணுமா என சொல்கிறார். ராதிகா உங்களுக்காக நிறைய சாக்கிரைஸ் பண்ணி இருக்கேன் என சொல்ல கோபி நானும் தான் உனக்காக என்னுடைய மொத்த குடும்பத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் என பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக ராதிகா எழுந்து வெளியே வருகிறார்.

அதனைத் தொடர்ந்து செல்வி மற்றும் பாக்யா இருவரும் கிச்சனில் இருக்க பாக்கியா லேட் ஆயிடுச்சு இன்னைக்கு நைட்டு இங்கேயே இருந்துடு என சொல்ல செல்வி இல்லக்கா நான் வீட்டுக்கு போறேன் என சொல்கிறார். கோபி ராதிகா பற்றி பேச பாக்கியா அது பத்தி எல்லாம் யோசிச்சா வேலை செய்ய முடியாது, மூலையில ஒக்காந்து விடுவோம் எதை பத்தியும் கவலைப்படாம போய்கிட்டே இருக்கணும் என சொல்கிறார்.

பிறகு செல்வி கிளம்பியதும் பாக்யா கதவை சாத்திவிட்டு உள்ளே வர ராதிகா கீழே இறங்கி வர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். அதன் பிறகு மறுநாள் காலையில் பாக்யா, அமிர்தா மற்றும் செல்வி என மூவரும் கேண்டீன் கிளம்புகின்றனர். ஈஸ்வரி கோவிலுக்கு கிளம்பிச் செல்ல தாத்தா ராமமூர்த்தி நிலா பாப்பாவை கொஞ்சி கொண்டு இருக்கிறார்.

நிலா பாப்பா வெளியே பார்க்குக்கு போக வேண்டும் என சொல்ல ராமமூர்த்தி அவரை கூட்டி செல்ல ரெடியாக ஜெனி நிலாவுக்கு பால் கொண்டு வந்து கொடுக்க அது தவறி கீழே கொட்டி விடுகிறது. பிறகு ராமமூர்த்தி நான் வெளியே ஏதாவது வாங்கி கொடுத்துகிறேன் என பாப்பாவை தூக்கிக் கொண்டு கிளம்பி விட அவர்கள் சென்ற பிறகு ஜெனி கீழே கொட்டிய பாலால் வழுக்கி கீழே விழுகிறார். பிறகு தட்டி தடுமாறி எழுந்து படிக்கட்டில் அமர்ந்து கண்கலங்குகிறார்.

இங்கே செழியன் கிளைன்ட் மாலினியை சந்திக்க வர அவர் ப்ராஜெக்ட் பத்தி இப்பவே எதுக்கு பேசணும் இன்னும் நாலைந்து வருடம் உங்களோடு தான் டிராவல் பண்ண போறேன் நம்பள பத்தி பேசி தெரிந்து கொள்ளலாம் என சொல்லி உங்களுக்கு கல்யாணம் ஆனதை கேட்டா அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கு என சொல்ல செழியன் ஏன் எனக் கேட்க இந்த மாதிரி பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டா நாங்க என்ன பண்றது என பேசுகிறார்.

வீட்டில் ஜெனி இந்த நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்றாங்க, ஆனா நான் கீழே விழுந்துட்டேன் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

1 hour ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

10 hours ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

10 hours ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

10 hours ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

1 day ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

1 day ago