baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் காலிங் பெல் அடிக்க ராதிகா கதவைத் திறக்க அவரது அம்மா நிற்பதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு உள்ளே வந்த அவரை ராதிகா கட்டிப்பிடித்து கண்கலங்க கோபி இப்பதான வந்தாங்க அதுக்குள்ள எதுக்கு அழுகிற என கேட்க என் கஷ்டத்தை சொல்லி அழுவ எங்க அம்மாவை தவிர வேற யாரு இருக்காங்க என சொல்கிறார்.
அடுத்ததாக ராதிகாவின் அம்மா நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, ராதிகா இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னபோது நாங்க தான் அவளை சம்மதிக்க வைத்து கல்யாணம் பண்ணி வச்சோம், காரணம் நீங்க அவ்வளவு நல்லா பாத்துப்பீங்கன்னு தான். ஆனா இப்போ கதையே வேற மாதிரி தானே இருக்கு என சொல்ல கோபி மன்னிப்பு கேட்கிறார்.
மேலும் ராதிகா இவர் குடிக்கிறதுக்கு நான் தான் காரணம் என்று இவர்கள் மொத்த குடும்பமும் சொல்றாங்க, அதோட இவங்க அம்மா நீ எங்களோட வந்துட்டுன்னு சொல்றாங்க என்று சொல்ல ராதிகாவின் அம்மா போகட்டும் அவங்க அப்பா அம்மாவோட தான் பாக்க போறாரு அதுல என்ன தப்பு இருக்கு கூடவே நீயும் போ. சட்டப்படி அவர கல்யாணம் பண்ணிக்கிட்ட மனைவி தானே, அவர் எங்க இருக்காரு அங்க தான் நீ இருக்கணும் என சொல்ல கோபி இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு என அதிர்ச்சி அடைகிறார். பிறகு கோபி நானும் அதெல்லாம் செட் ஆகவே ஆகாது நான் எங்கேயும் போக போறது கிடையாது ராதிகா மற்றும் மயூவுடன் தான் இருக்கப் போறேன் என சொல்லி அங்கிருந்து நைசாக நகருகிறார்.
அடுத்ததாக செழியன் ஒரு கிளைன்ட் மீட்டிங்கிற்காக ரெஸ்டாரன்ட் வந்திருக்க அங்கு கோபி சரக்கு அடித்துக் கொண்டு இருக்கிறார். செழியன் மாலினி என்பவரை மீட் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பும் போது கோபி குடிபோதையில் நிதானம் இல்லாமல் காரை தேடிக் கொண்டிருக்கிறார்.
பிறகு செழியன் அவரை காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்ய கோபி கார் ஓட்ட முடியாத நிலையில் இருப்பதால் செழியன் காரை ஓட்டி வருகிறார். அப்போது கோபி நீங்க எல்லாரும் நல்லவங்க நான் தான் பேட் பாய். நான் இந்த ராதிகாவை கல்யாணமே பண்ணி இருக்க கூடாது பெரிய தப்பு பண்ணிட்டேன் என புலம்புகிறார். இன்னொரு பக்கம் ராதிகா கோபி இன்னும் வீட்டுக்கு வராததால் ஷோபாவில் உட்கார்ந்தபடி காத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…
'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…