Baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் நல்லபடியாக நடந்து முடிய எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாக்யாவுடன் படிக்கும் பெண்மணி ஒருவர் எல்லோரையும் பார்த்துட்டேன் உங்க ஹஸ்பண்ட் எங்கே என கேட்க பிறகு பாக்கியா இருவருக்கும் விவாகரத்தான விஷயத்தை சொல்கிறார்.
அதன் பிறகு நண்பர்கள் கிளம்பும்போது பழனிச்சாமி பாக்யாவின் தன்னம்பிக்கையை பாராட்டி அவரிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்க அப்போது காய்கறி வாங்க வெளியே வரும் கோபி இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பக்கத்திலேயே எழில் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து டேய் உங்க அம்மாவை பாருடா என புலம்புகிறார். ஆனாலும் கோபி எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து நகர்கிறார்.
அடுத்து இனியா வீட்டுக்கு கிளம்பும்போது இப்பதான் உன்னுடைய அருமை எனக்கு புரியுது நீ ரொம்ப நல்ல அம்மா, மிஸ் யூ என சொல்லி முத்தமிட்டு வீட்டுக்கு கிளம்ப பாக்யா கண்கலங்குகிறார். இனிய ஏண்டா அப்படி சொன்னா அவ நல்லா இருக்காளா அவளுக்கு அந்த வீட்டில ஏதாவது பிரச்சனையா என கஷ்டப்பட இதில் ஆறுதல் சொல்ல ஈஸ்வரி அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இருக்காது அதான் அவ கூட அவருடைய தாத்தா இருக்காருல என சொல்கிறார்.
இந்தப் பக்கம் ராதிகா கோபியை சாப்பிட கூப்பிட கோபி இனியா வரட்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு இனியா இன்னும் வரல அவ அந்த வீட்டுக்கு போனா அங்கேயே தங்கிடுவாள்னு பயமா இருக்கு என சொல்ல அப்படின்னா எதுக்கு அவளை அங்க அனுப்புறீங்க.? ஏதாவது காரணம் சொல்லிட்டு வாரத்துல மூணு நாள் அங்க போயிருடா, அங்கே எதுக்கு போகணும் போகக்கூடாது என்று சொல்லுங்கள் என சொல்லிக் கொண்டிருக்க அப்போது இனியா வந்து விடுகிறார்.
என்னை பத்தி என்ன போட்டு கொடுக்குறீங்க என சொல்ல உன்னை பற்றி நான் எதுக்கு போட்டு கொடுக்கணும் ஆமா நீ எதுக்கு அந்த வீட்டுக்கு போற? அங்கு தான் வேணான்னு சொல்லிட்டு இருக்காங்க இங்க ஓடி வந்த அப்புறம் எதுக்காக போற என கேட்க அங்கு எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு ஓடி வரல டாடி வேணும்னு இங்க வந்தேன் என்று கூறுகிறார் இனியா.
நாங்க போகக்கூடாது என்று சொல்ல நீங்க யாரு என கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்க ராமமூர்த்தி தலையிட்டு நீ ஏன் அவளை அங்க போகக்கூடாது என்று சொல்ற அது சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு என கேட்டு ஷாக் கொடுக்கிறார். எதுக்கு சண்டை போட்டு எல்லாருடைய சந்தோஷத்தை கெடுக்கிற என கேட்க நான் உங்க சந்தோசத்தை கெடுக்குறேனா? நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்க நான் தான் சந்தோஷம் நிம்மதி இல்லாம இருக்கேன் என ராதிகா சொல்கிறார்.
மேலும் ராமமூர்த்தி நான் அன்னைக்கே இந்த கல்யாணம் பண்ணாதனு தலப்பா டா அடிச்சுக்கிட்ட என் பேச்சை கேட்டியா என சொல்ல பாத்தீங்களா உங்க அப்பா என்ன சொல்றாரு என கோபியிடம் சண்டைக்கு போக கோபி கொஞ்சம் அமைதியா இரு என ராதிகாவை சொல்ல நான் தான் அமைதியா இருக்கணுமா? இவங்கள எதாவது சொல்றீங்களா என சண்டை போடுகிறார். இதனால் கோபி செய்வதறியாது தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…
நடிகை திரிஷா சமீபத்தில் தனது நண்பர்களுடன் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை மாளவிகா ரகுநாத் என்பவர்…
நடிகர் அஜித்குமாரின் தொழில்முறை ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் பிரம்மாண்ட ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’. இயக்குநர் ஏ.எல். விஜய்…
‘கிடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படம் ‘தகப்பன்’.…
வித்தியாசமான கதைக்களம் கொண்ட புதிய திரைப்படத்தை Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு…
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records