baakiyalakshimi serial episode update
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா இனியாவை திட்ட கோபி அதை பார்த்து சிரிக்கிறார். பிறகு இனியா இவங்க எதுக்கு என்னை திட்டுறாங்க என சத்தம் போட அப்போது மீண்டும் வரும் ராதிகா உங்க அம்மா இருந்திருந்தாலும் இதுதான் பண்ணி இருப்பாங்க இப்போ அவங்க இல்ல இங்க நான் தான் இருக்கேன்.
இதெல்லாம் உங்க அப்பா கேட்டிருக்கணும் அவர் கேட்கல என சொல்லி என்ன கோபி நான் கேட்டதுல ஏதாவது தப்பு இருக்கா என்ன கேட்க கோபி அதெல்லாம் எந்த தப்பும் கிடையாது நீ கேட்டது 100% சரி என சொல்ல இனியா அதிர்ச்சி அடைகிறாள்.
மறுபக்கம் பாக்யா தொடர்ச்சியாக கல்யாண ஆர்டர் களை எடுத்து சமைக்கிறார். அடுத்து டியூஷன் வரும் இனியா சரணிடம் ஜாலியாக பேசி பழகுகிறார். உனக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது என கேட்க சரண் இனியாவின் நம்பரை கண்டுபிடித்த விஷயத்தை சொல்கிறார். பிறகு இனிய கோபி இரண்டாவது கல்யாணம் செய்து கொண்ட விஷயத்தை சொல்ல சரண் இதெல்லாம் இப்போ சாதாரணம் என சொல்கிறான்.
அடுத்து வீட்டில் எழில் நிலா பாப்பா உடன் விளையாடிக் கொண்டிருக்க அப்போது அங்கு ஈஸ்வரி மற்றும் செழியன் என இருவரும் வந்து உட்காருகின்றனர். பிறகு ஜெனியும் அங்கு வர எழில் போன் ஒன்று வந்ததால் எழுந்து வெளியே செல்கிறார்.
ஜெனி பாப்பாவை பார்த்துக் கொண்டிருக்கும்போது இது யார் சொல்லு என கேட்க நிலா பாப்பா ஈஸ்வரி பார்த்து பாட்டு என சொல்ல அவர் கோபமாகிறார். யாருக்கு யார் பாட்டி யாரோ பெத்த பிள்ளைக்கு எல்லாம் நான் பார்த்தியா என கோபப்படுகிறார். அதன் பிறகு இது செழியன் பெரியப்பா சொல்ல நிலா பாப்பாவும் பெரியப்பா என சொல்ல செழியனும் கோபப்படுகிறான்.
இதைக் கேட்ட எழில் போனை வைத்துவிட்டு வந்து நிலா பாப்பாவை தூக்கிக் கொண்டு மேலே சென்று விடுகிறார். அதன் பிறகு ஜெனி குழந்தைகிட்ட போயிட்டு வெறுப்பை காட்டறீங்களே என பேசிவிட்டு எழுந்து சென்று விடுகிறார்.
பிறகு செழியன் இவ இப்படித்தான். எந்த சென்சும் கிடையாது என சொல்ல ஈஸ்வரி எல்லாம் அவ மாமியார்கிட்ட இருந்து கத்துகிறது என கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,…