பாக்கியாவிற்கு கிடைத்த ஆர்டர்.செழியனை கிண்டல் அடித்த ஜெனி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தா காபி கொண்டு போய் கொடுக்க ஈஸ்வரி கோபப்பட்டு காபி கப்பை கீழே தட்டி விட்டு உடைக்கிறார். பாக்கியா எங்க? இந்த வீட்ல என்னென்னமோ நடக்குது எனக்கு காபி ஒன்னும் முக்கியம் கிடையாது.

திரும்பத் திரும்ப என் முன்னாடி இப்படி வந்து நாடகம் போடாத இதுவே முதலும் கடைசியுமா இருக்கணும் என ஈஸ்வரி அமிர்தாவை எச்சரித்து விட்டு உள்ளே செல்கிறார். அதன் பிறகு அமிர்தா ரூமில் இருக்க எழில் அவளிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு கொஞ்ச நேரத்தில் ஜெனியும் உள்ளே வந்து அமிர்தாவிடம் சாரி கேட்க இதெல்லாம் நடக்கும் என்று தெரியும் நான் எதையும் பெருசா எடுத்துக்கல என அமிர்தா சொல்கிறார்.

அதன் பிறகு பாக்கியா ராஜசேகரை சென்று சந்திக்க அவர் வரும் தொடர்ந்து எட்டு நாளும் மேரேஜ் பங்க்ஷன் இருக்கு உங்களால் கேப் இல்லாமல் சமைக்க முடியுமா அல்லது நீங்க மூணு நாலு பங்ஷன் மட்டும் பார்த்துக்கறீங்களா மீதிக்கு நான் வேற ஆள் பார்க்கவா எனக்கேற்ற பாக்யா கோபிக்கு பணம் தர வேண்டியதை நினைத்து பார்த்து தாங்களே எல்லா ஆர்டரையும் செய்கிறோம் என சொல்கிறார்.

இருந்தாலும் ராஜசேகர் அது ரொம்ப கஷ்டம் நீங்க எதுவாக இருந்தாலும் வீட்டுக்கு போயிட்டு நல்லா யோசிச்சுட்டு ஒரு பதிலை சொல்லுங்க என அனுப்பி வைக்கிறார்.அடுத்து ஜெனி நிலா பாப்பாவை தூக்கிக்கொண்டு தன்னுடைய ரூமுக்கு சென்று செடியை இவர்தான் உன் பெரியப்பா என அறிமுகம் செய்து வைக்க செழியன் கடுப்பாகிறான். உன்னால எப்படி இப்படி இருக்க முடியுது என கேட்க நீதான் பழைய காலத்து அங்கிள் மாதிரி நடந்துக்கிற என செழியனை கிண்டல் அடிக்கிறார்.

அதன் பிறகு செல்வி நிலா பாப்பாவை கொஞ்சிக் கொண்டிருக்க அங்கு வரும் பாக்யா, அமிர்தா மற்றும் ஜெனியிடம் தை மாதம் என்பதால் தொடர்ந்து சமையல் ஆர்டர் கிடைத்திருப்பதாக சந்தோஷமாக சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update

jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

21 hours ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

22 hours ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

22 hours ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

22 hours ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

22 hours ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

23 hours ago