கோபியின் வேலையால் கடுப்பான ராமமூர்த்தி. எழில் மீது கோபமான ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா தன்னுடைய மாமனாரிடம் அவருக்கு என்ன சுத்தமா பிடிக்கல இந்த வீட்டுக்கு என் பெயரை வச்சதுனால தான் இவ்வளவு பிரச்சனை இதுவே உங்க பேர் அல்லது அத்தை பேர் வெச்சிருந்தா இவ்வளவு கோபப்பட்டு இருக்க மாட்டாரு. நீங்க அவருக்கு என்ன கல்யாணம் பண்ணி வச்சிருக்கவே கூடாது மாமா. நான் உங்கள கஷ்டப்படுத்தணும்னு சொல்லல 25 வருஷமா அவரும் சந்தோஷமாக வாழல, நானும் நிம்மதியா வாழல. நான் ஏன் அவருக்கு விவாகரத்து கொடுத்து தெரியுமா அந்த ஒரு நிமிஷம் மட்டும் தான் நான் எனக்காக யோசித்தேன். இனி யாரும் என்ன பிடிக்கலைன்னு சொல்ல மாட்டாங்க அப்படின்னு தோணுச்சு. அது அவருக்கு மட்டும் விடுதலை இல்லை எனக்கும்தான் விடுதலை என பாக்யா சொல்ல ராமமூர்த்தி கண்ணீர் வடிக்கிறார்.

இந்த பக்கம் எழில் வீட்டுக்கு வர பாட்டியிடம் பேச முயற்சி செய்ய ஈஸ்வரி கோபப்படுகிறார். பிறகு ஜெனி எழிலுக்கு டீ கொடுத்து பாட்டி செய்கிறது எதுவும் சரியில்ல என சொல்ல நீங்க இந்த விஷயத்தை அம்மாகிட்ட எதுவும் சொல்லாதீங்க அவங்களுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க என சொல்கிறார்.

அடுத்து கோபி ஊரில் இருப்பவருக்கு போன் செய்து நிலம் வாங்குவதாக இருந்தவரிடம் அந்த சொத்தில் எனக்கும் பங்கிருக்கு எனக்கு தெரியாம எங்க அப்பா சொத்து வித்தா நான் கோர்ட்டுக்கு போய் கேஸ் போடுவேன் என சொல்ல அவர்கள் எங்களுக்கு இந்த சொத்து வேண்டாம் என ராமமூர்த்தியிடம் சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

அடுத்து ராமமூர்த்தி ஈஸ்வரிக்கு போன் போட்டு உன் பையன் என்ன நெனச்சிட்டு இருக்கான் என நடந்த விஷயத்தை சொல்லி ஆவேசப்படுகிறார். அவன் பொறந்த அப்போ நான் எவ்வளவு சந்தோஷமா அவனை கொஞ்சின, ஆனால் இப்ப சொல்றேன் அவன் நல்லாவே இருக்க மாட்டான், மண்ணோட மண்ணாகி போயிடுவான் என சாபம் விடுகிறார். ஊருக்கு வந்து அவனுக்கு இருக்கு என போனை வைக்க அப்போது எழில் மேலே இருந்து கீழே இறங்கி வர ஈஸ்வரி உனக்கு இப்ப சந்தோஷமா? உனக்கு உன் சந்தோசம் மட்டும் தான் முக்கியம் இந்த குடும்பம் எப்படி போனாலும் உனக்கு கவலை இல்லை என திட்டிவிட்டு உள்ளே செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Vishwanath and Sons Trailer

Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…

1 day ago

The Paradise Tamil Teaser

The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander

1 day ago

ஜி.டி.என் திரை விமர்சனம்

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…

1 day ago

‘நடிகர் சங்க கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்’ – விஷால் அறிவிப்பு

சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…

1 day ago

‘அதிகார ஆசை இல்லை… அரசியலுக்கு வர விருப்பமில்லை!’ – விஜய் குறித்து மனம் திறந்த மாதவன்

தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…

1 day ago

தமிழ் தெரியாதது பெருமை இல்லை… அது அவமானம்! – பள்ளி விழாவில் மாணவர்களுக்கு தனுஷ் உருக்கமான அறிவுரை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…

1 day ago