baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி எழுத்தில் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி கோபமாக தன் அப்பாவிடம் பேசுகிறார். நான் நெனச்சனா இப்பவே அந்த வீட்டுக்குள்ள வந்து எல்லாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியும், இத்தன வருஷமா அந்த மொத்த குடும்பத்தையும் முதுகு மேல போட்டு சுமந்து இருக்கேன். எல்லாத்தையும் தியாகம் பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கேன் என பேசுகிறார்.
அடுத்ததாக பாக்யா சோபாவில் உட்கார்ந்து இருக்க காய்கறி வெட்டிக் கொண்டிருந்த செல்வி எனக்கா உனக்கு வேலை முடி வந்துடுச்சு என சொல்ல பாக்கியா அதை பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதன் பிறகு வலை முடிக்கு கருப்பு மை தடவிக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் ஜெனி பியூட்டி பார்லர் போகலாம் என சொல்ல பாக்கிய வேண்டாம் என மறுக்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நாம போகலாம் இன்னைக்கே போகலாம் நான் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்றேன் என ஜெனி எழுந்து செல்கிறார்.
மறுபக்கம் கோபி ராதிகாவிடம் வந்து இன்னைக்கு காலையில டிபன் ஆர்டர் பண்ணியாச்சு மதியம் என்ன ஸ்பெஷல் என கேட்க என்ன நீங்க போரிங் புருஷன் மாதிரி காலையில் என்ன சாப்பாடு மதியம் என்ன சாப்பாடு என்று கேட்டுட்டு இருக்கீங்க, இன்னைக்கு மதியமும் வெளியே பாத்துக்கோங்க நான் பியூட்டி பார்லர் போறேன் வரத்துக்கு ஒரு மூணு மணி நேரம் ஆகும், வாஷிங் மெஷின்ல துணி போட்டு இருக்கேன் அது முடிஞ்சதும் எடுத்து காய போட்டு விடுங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறார் ராதிகா.
அடுத்து ஜெனி பாக்யாவை பியூட்டி பார்லர் கூப்பிட பாக்கியா வர மறுக்க பிறகு செல்வியும் வந்து வா அக்கா போயிட்டு வரலாம் என கூப்பிடுகிறார். இவர்கள் மூவரும் போடும் சத்தத்தை கேட்டு ஈஸ்வரி வந்து என்ன ஆச்சு என்ன சத்தம் சண்டையா என விசாரிக்க முழுவதும் அதெல்லாம் ஒன்றும் இல்லை ஆன்ட்டி வெளியே போறாங்க என சொல்லி சமாளிக்கின்றனர். பாக்யாவும் ஆபீஸ் போறதாக சொல்லி கிளம்பி செல்கிறார்.
ராதிகா பாக்கியா என இருவரும் ஒரே பியூட்டி பார்லரில் பேசியல் செய்வதற்காக வந்துள்ளனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Ennamo Sonneenga Perusa Lyrical Video | James Vasanthan, Gaana Shiva | Dushy, Janany Kunaseelan
Kaathaaga Vaazhaporen Lyrical Video | Magudam | Vishal | GV Prakash | Dushara
Seppu Sela Video Song | Ram in Leela | Rio Raj | Vartika | Ankit…
'காதல் ரீசெட் ரிப்பீட்' மற்றும் மராத்தி திரைப்படமான 'வேத்' மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஜியா சங்கர், தனது நிச்சயதார்த்தத்தை…
'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமாக 'மக்கள்…
இந்துக்களின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. இதில்…