இனியா கேட்ட கேள்வி, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கவுன்சிலர் வார்னிங் கொடுக்க,இனியாவிற்கு உண்மை தெரிந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி பதறி அடித்து ஓடி வந்து நிற்க என்ன ஆச்சு செல்வி என்ன விஷயம் என்று கேட்க அந்த கவுன்சிலர் கட்சியில் இருந்து தூக்கிட்டாங்க அதுக்கு காரணம் நம்ம ஹோட்டல் நடந்த பிரச்சனைதான் என்று கடைவீதியில் பேசிக்கிறாங்க ரொம்ப பயமா இருக்கு ஏற்கனவே அந்த ஆளு கோவத்துல இருந்தா இப்ப நம்ம என்ன செய்யப் போறான் தெரியல என்று சொல்லி முடிப்பதற்குள் கவுன்சிலர் கோபமாக ஹோட்டலுக்கு வருகிறார்.

நான் உன்ன சும்மா விடமாட்டேன் 23 வருஷமா அந்த கட்சியில் இருந்த ஆனா இன்னைக்கு நான் அதிலிருந்து வெளியே வரதுக்கு நீ காரணம் ஆயிட்ட என்று கோபப்பட, அதற்கு பாக்யா நான் மினிஸ்டர் கிட்ட பேசும் போது உங்களை கட்சியில் இருந்து தூக்குவதை பற்றியோ எதையும் பேசல என் பையன் வெளியே வரவேண்டும் என்ற விஷயத்தை தான் சொன்னேன் நீங்க கட்சியில் இருந்து வந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்ல எல்லா சம்பந்தமும் நீ மட்டும் உன்னால தான் என்ன கட்சியிலிருந்து வெளியே அனுப்பிட்டாங்க நான் உன்ன சும்மாவே விடமாட்டேன் எல்லா நேரமும் மினிஸ்டர் வந்து உங்ககிட்ட நிக்க மாட்டான் என்றெல்லாம் பேசிவிட்டு வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறார்.

மறுபக்கம் இனியா சுதாகர் பாக்யாவின் ஹோட்டலை மூட சொன்ன விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க தண்ணீர் இல்லாததால் எடுக்க கீழே வருகிறார் அந்த நேரம் பார்த்து பாக்யாவின் முதல் ஹோட்டலில் நல்ல வருமானம் வருவதாகவும் சுதாகர் அந்த ஓட்டலை வாங்கிய விஷயத்தையும் பேசிக் கொண்டு இருக்க இனியா அதை கேட்டு விடுகிறார். உடனே சுதாகரிடம் வந்து அப்பா அம்மாவோட ஃபர்ஸ்ட் ரெஸ்டாரன்ட் ஐயும் நீங்கதான் வாங்குனீங்களா? எங்க வீட்ல இருக்குற எல்லாரும் வேற யாரோ வாங்கினார்கள் என்று நினைச்சுக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் சந்திராவும் வந்துவிட என்ன பிரச்சனை என்று கேட்கிறார் பிசினஸ் விஷயமா பேசிட்டு இருந்தோமா இவ வந்து சண்டை போட்டுக்கிட்டு இருக்கா என்று நிதிஷ் சொல்ல சண்டையே போடல சண்டை போடுவதற்கு எல்லா உரிமையும் இருந்து நான் பொறுமையா தான் பேசிகிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார் அதற்கு சுதாகர் உங்க அம்மா கிட்ட இருந்து பணம் கொடுத்து வாங்குனா இரண்டாவது ரெஸ்டாரண்டுக்கு ஓனர் கிட்ட இருந்து வாங்குன முதல் ரெஸ்டாரன்ட் போய் என்கிட்ட எல்லாம் ப்ரூப் இருக்கு என்று சுதாகர் சொல்ல அதற்கு இனியா ஊர்ல இவ்ளோ ரெஸ்டாரன்ட் இருந்தும் எதுக்கு எங்க அம்மாவோட ரெஸ்டாரன்ட் மட்டும் வாங்கணும் என்ற கேள்வி கேட்கிறார்.

உடனே நித்திஷ் கோபப்பட சுதாகர் அவரை அமைதியாக இருக்கச் சொல்லுகிறார். எங்க அம்மா கஷ்டப்பட்டு உருவாக்கின ரெஸ்டாரன்ட் அது எதுக்கு நீங்க வாங்கணும் என்று கேட்க அதற்கு பதில் உங்க அம்மாகிட்ட தெரியும் சும்மா கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்காதே இனிய என்று சொல்லிவிட்டு அந்த டீக்கடையை மூட சொல்ற வழிய பாரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே இனியா வீட்டுக்கு வர பாக்யாவும் ஈஸ்வரியும் கிச்சனையில் இருக்கின்றனர் இனியா வந்தவுடன் ஈஸ்வரி என்னை இனியா திடீர்னு வந்திருக்க இந்த வெயில்ல என்று சொல்ல ஒன்னும் இல்ல பாட்டி சும்மாதான் பார்க்க வந்தேன் என்று சொல்லுகிறார். சரி கொஞ்ச நேரம் கழித்து ஈஸ்வரி உள்ளே போய் படுத்து விட பாக்யாவிடம் இனியா உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணுமா என்று சொல்லி சுதாகர் முதல் ரெஸ்டாரண்ட் வாங்குன விஷயத்தை சொல்ல பாக்யா அமைதியாக இருக்கிறார் என்னமா இவ்வளவு பெரிய விஷயம் சொல்ற நீ அதிர்ச்சியாகாம இருக்க என்று சொல்ல ஏற்கனவே தெரிஞ்ச விஷயத்துக்கு எப்படி இனியா அதிர்ச்சியாக முடியும் என்று கேட்கிறார் உனக்கு எப்போ தெரியும் என்று கேட்க அந்த ஓனர் எப்போ என ரெஸ்டாரன்ட் காலி பண்ண சொன்னாரு, அப்போவே தெரியும் என்று சொல்ல அப்ப ஏமா என்கிட்ட சொல்லல எனக்காக நீ எவ்வளவு கஷ்டப்படுவ என்று சொல்லி அழுகிறார் உன்ன கஷ்டப்படுத்திட்டு தான் எனக்கு வாழ்க்கை கிடைக்கணும்னா எனக்கு அந்த வாழ்க்கையே தேவையில்லை என்று இனியா கண்கலங்கி அழுகிறார்.

ஆனால் பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார். மறுபக்கம் இனியா கோபியுடன் காரில் வர சோகமாக இருப்பதை பார்த்து கோபி என்னாச்சு ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று சொல்ல என்ன டாடி பேச சொல்றீங்க எது சொன்னாலும் எனக்கு முன்னாடியே தெரியும் எனக்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்குறீங்க என்ன பேச சொல்றீங்க என்று சொல்ல என்னாச்சு என்ன விஷயம் என்று சொல்ல இனியா நடந்த விஷயங்களை சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார் பிறகு கோபியின் முடிவு என்ன? இனியா என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode update 03-06-25
jothika lakshu

Recent Posts

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

3 hours ago

மீனாவுக்கு வந்த புது ஐடியா, ரோகினியை திட்டும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

3 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

5 hours ago

டாஸ்கில் தீயாக விளையாடும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

5 hours ago

ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

19 hours ago

Kombuseevi Official Teaser

Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja

24 hours ago