இனியாவால் ஷாக்கான ராதிகா. திட்டிய ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரூமில் கோபி இனியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மறுப்பக்கம் செழியன் மாலினியை சந்திக்க மாலினி இன்னொரு முறை ப்ராஜெக்ட் பற்றி முழுசா சொல்லுங்க, எனக்கு சில டவுட்டு இருக்கு என சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

செழியன் இது என்னுடைய ஃபேமிலி டைம் வீட்டுக்கு போகணும் என சொல்லியும் மாலினி இன்னைக்கு ஒரு நாள் லேட்டா போங்க எனக்கு டைம் இருக்கு என்று செழியனை தடுத்து நிறுத்த முயற்சி செய்ய அப்போது ஜெனி போன் செய்து எங்க இருக்க நான் இன்னும் சாப்பிடாம உனக்காக காத்திருக்கிறேன் என்று சொல்ல உடனடியாக செழியன் அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.

அதைத்தொடர்ந்து இனியா போதும் டாடி காலையில படிக்கலாம் என சொல்ல ராதிகா நிம்மதி அடைய சரி காலையில ஆறு மணிக்கு ஸ்டார்ட் பண்ணலாம் என கோபி சொல்ல அவ்வளவு லேட்டாவா? நான்கு மணிக்கு ஸ்டார்ட் பண்ணலாம் அப்பதான் சரியா இருக்கும் என இனியா ராதிகாவுக்கு ஷாக் கொடுக்கிறார்.

பிறகு செழியன் தூங்காமல் இருக்க ஜெனி என்னாச்சு என கேட்க மாலினி பற்றி சொல்ல ஜெனி எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு, நீ ரொம்ப ரொம்ப நல்ல பையன் என சொல்லி செழியனை சமாதானம் செய்கிறார்.

அதன் பிறகு பாக்யாவும் இனியாவும் ஹாலில் தூங்கிக் கொண்டிருக்க இருவரும் வெக்கையில் இருப்பதை பார்த்து கோபி பரிதாபப்படுகிறார். பிறகு கோபி கிச்சனுக்கு செல்ல இனியா யாரோ உள்ள போன மாதிரி இருக்கு திருடன் வந்துட்டான் என பாக்கியாவை எழுப்பி விட பாக்கியா கிச்சனுக்கு சென்று கோபியின் மீது மோத இருவரும் பயப்படுகின்றனர். ‌‌

பிறகு கோபி சாரி கேட்டுவிட்டு ரூமுக்கு செல்கிறார். மறுநாள் காலையில் இனியா ஸ்கூலுக்கு கிளம்பி தயாராக இருக்க கோபி நான் கூட்டிட்டு போய் விடுறேன் என வந்து இனியாவை அழைத்துக் கொண்டு கிளம்பும்போது ராதிகா எங்க போறீங்க என கேட்கிறார்.

இனியாவுக்கு 12th எக்ஸாம் ஸ்டார்ட் ஆயிடுச்சுல அவள ஸ்கூல்ல விடப்போறதாக கோபி சொல்ல நான் மயூவ ஸ்கூல்ல விட சொல்லலாம்னு இருந்தேன். இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு என்று சொல்ல கோபி இனியாவுக்கு சீக்கிரம் போகணும் நான் போயிட்டு வரதுக்குள்ள மயூவுக்கு லேட் ஆகிடும் என்ன செய்வது என கேட்க ராதிகா இனியாவ கூட்டிட்டு போய்விடுவதற்கு இங்கே இவ்வளவு பேர் இருக்காங்க, மயூராவை கூட்டிட்டு போய்விட உங்க கிட்ட மட்டும் தானே கேட்க முடியும் என ராதிகா பேச ஈஸ்வரி அவன் பொண்ண அவ ஸ்கூல்ல கூட்டிட்டு போய் விட கூட உன்கிட்ட பர்மிஷன் வாங்கணுமா என சத்தம் போடுகிறார்.

ஏன் லா எல்லாம் பேசுவாளே உங்க அம்மா அவளை கூட்டிட்டு போய் விட சொல்ல வேண்டியது தானே? என திட்ட பாக்கியா எழிலுக்கு போன் செய்து வரவைத்து இனியாவை அவரோட அனுப்பி வைக்க ராதிகா மேல வாங்க கோபி என கோபியை கூட்டிச்சென்று மேலே செல்கிறார்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


baakiyalakshimi serial episode,
jothika lakshu

Recent Posts

RANABAALI Teaser

RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan

14 hours ago

Magale Music Video

Magale Music Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

14 hours ago

இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…

14 hours ago

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…

14 hours ago

இந்தி தேசிய மொழியா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய சிவராஜ் குமார்!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…

15 hours ago

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…

15 hours ago