Baakiyalakahmi Serial Episode Update 30-05-22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியா வீட்டுக்கு வராததால் பதறிப்போன பாக்கியா நேராக வீட்டுக்கு சென்று காத்திருந்து எதிரே வந்த இனியாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
பிறகு இனியா பெரிய பொண்ணு எங்க போய்ட போறா என எல்லோரும் சொல்ல அதன்பிறகு ஈஸ்வரி நீ ஏன் பாக்கியா இப்படியிருக்க என கேட்கிறார். இல்லாத அவரு இதுவரைக்கும் நீ யார்கிட்ட சத்தம் போட்டு பேசினது இல்ல இன்னைக்கு அடிக்க கை வாங்கிட்டாரு அதனால எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு என கூறுகிறார். பிறகு ஜெனி அங்கிளை டாக்டரிடம் கூட்டி சென்று காட்டலாமா என கேட்கிறார். உடனே ஈஸ்வரி மற்றும் பாக்யா எதுக்கு என கேட்க அவர் எப்போதும் ஒரு மாதிரி பதற்றமாகவே இருக்கிறார். செழியனை விட்டு பேசச் சொல்லலாம் என கூறுகிறார்.
இல்ல அவர் வரமாட்டார் என பாக்கியா சொல்ல கொஞ்ச நாள் பார்க்கலாம் இப்படியே இருந்தா கூட்டிட்டு போகலாம் என ஈஸ்வரி கூறுகிறார். இந்த பக்கம் கோபி தன்னுடைய நண்பரிடம் குடித்து கொண்டு ராதிகா பற்றி பேசி புலம்பிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ராதிகா வாய்ஸ் மெசேஜ் ராஜேஷுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை அவர் எனக்கு பண்ணதை தான் நீங்களும் பண்ணி இருக்கீங்க. உங்ககிட்ட மயூவை பழக விட்டது என்னுடைய தப்புதான். திரும்பத் திரும்ப நா தப்பான ஆளை தான் சூஸ் பண்றேன் என கூறுகிறார்.
இதைக்கேட்ட கோபி நானும் ராஜேஷும் ஒண்ணா? எப்படி சென்ற பாரு என தன்னுடைய நண்பரிடம் ஆவேசமாக பேசுகிறார். நான் பிராடா? நான் இவளை யூஸ் பண்றதுக்காக பழகிட்டு இருக்கேன் எவ்வளவு உண்மையாக நேசிக்கிறேன் என கூறுகிறார். நீ நான் தான் பாக்கியாவோட புருசனு சொல்லிட்டு பழகியிருந்த எந்த பிரச்சனையும் இல்லை. பொய்யை மறைக்க அதுக்கு மேல பொய் பொய்யா சொல்லிக்கிட்டே போனது தான் இப்போ பிரச்சனை என கூறுகிறார்.
அதன் பிறகு இதற்கு நானே ஒரு முடிவு கட்டுகிறேன் என சொல்லிவிட்டு நேராக காரை எடுத்துக்கொண்டு ராதிகா வீட்டிற்குச் செல்கிறார் கோபி. ராதிகா கோபியை நினைத்து வருத்தமாக இருக்க மயூ நீங்க இப்படி இருந்தா நல்லாவே இல்லை உங்களுக்கும் உங்களுக்கும் ஏதாவது சண்டையா என கேட்க அதெல்லாம் எதுவும் இல்லை என கூறுகிறார். பிறகு மயூ மேலே எழுந்து சென்றுவிட கோபி வந்து கதவைத் தட்ட ராதிகா அதிர்ச்சியாகி நிற்கிறார். மேலே இருந்து கீழே வந்த மயூ கதவைத் திறந்து கோபியை உள்ளே அழைக்கிறார். கோபி மயூரா அருகே முட்டிபோட்டுக்கொண்டு அவரிடம் பேச குடித்திருப்பது தெரிவதால் ஓடிச் சென்று விடுகிறார். ராதிகா மயூவை மேலே அனுப்பி வைக்கிறார். இப்ப எதுக்கு இங்க குடிச்சுட்டு வந்து டிராமா போடுறீங்க என கேட்க நான் எதுக்கு ட்ராமா போடனும் என கோபி கேட்கிறார்.
உங்க குடும்பத்த கூட்டிட்டு போய் காட்டுங்கனு சொன்னேன் அது உங்களால முடியல அப்போ உங்ககிட்ட ஏதோ தப்பு இருக்குனு அர்த்தம் தானே என கேட்க இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் கோபி என்னுடைய குடும்பத்தை பார்க்கணும் அவ்வளவுதானே என பாக்யா உடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்துக் காட்ட அதிர்ச்சியான ராதிகா கீழே விழுந்து அழுகிறார்.
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…