Categories: NewsTamil News

கோடி எல்லாம் தாண்டி பில்லியன் கணக்கில் சம்பளம் கேட்ட பிரபல நடிகர்!!

3 மொழி படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகர் பிரபாஸ் சம்பளமாக ஒரு பில்லியன் கேட்டுள்ளார். அதாவது 100 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் இரண்டாம் பாகங்களில் இரு வேடங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானார்.

இந்தப் படத்திற்குப் பின்பு, இவரது மார்க்கெட் ரேட் எகிறியுள்ளது. விஜய்லாந்தி என்ற பட நிறுவனம் தனது பொன்விழா ஆண்டையொட்டி தயாரிக்கும் முதல் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த நடிகர்திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.

‘பிரபாஸ் 21’ என்று இந்தப் படத்திற்கு தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்திலும் பிரபாஸ் இரட்டை வேடத்தில் உள்ளார்.

இந்தியாவிலேயே ரஜினிகாந்த் தான் ‘தர்பார்’ படத்திற்கு 70 கோடி சம்பளம் பெற்றிருந்த நிலையில் அவரைத் தாண்டி பிரபாஸ் 100 கோடி சம்பளம் கேட்டிருப்பது சக நடிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.

admin

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

2 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

2 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

2 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

2 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

2 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

3 days ago