ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’ தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ‘அயலான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘அயலான்’ திரைப்படத்தின் டிரைலர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…
Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…