avatar 2 release date
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன.
அவதார் படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பர் 2021 வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் படத்தின் அடுத்த நான்கு பாகங்களை வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது அவதார் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கப்பட்ட 'செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்' நிகழ்ச்சி, தற்போது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று…
இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
மருத்துவர் ஒருவரைத் தவறான காரணத்தைக் கூறி வீட்டிற்கு வரவழைத்து தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், நடிகை அதுல்யா சந்திரா உள்ளிட்ட…
கேரளாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அம்மாநில அரசு புதியதாக 'சாலை பாதுகாப்பு மிஷன்'…
Mr Bhaarath Trailer | Niranjan | Samyuktha | Pranav Muniraj | Lokesh Kanagaraj
Vaanavedikkai Official Trailer | Shanmugapandiyan, Shivani, Mohan Raja| Thiru | Sam CS | LK Sudhish…