Arvind Swamy riding a bicycle with his daughter
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.
அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, கள்ளபார்ட் ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவாகும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மகளுடன் சைக்கிளில் உற்சாகமாக பயணித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு லைக்சும் குவிந்து வருகிறது.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…
Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…