கொரோனாவால் உயிரிழந்த மனைவி குறித்து அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு

இயக்குனர், பாடலாசிரியர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். அவரின் மனைவி சிந்துஜா கடந்த வாரம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் மறைந்த தனது மனைவி குறித்து அருண்ராஜா காமராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறிப்பட்டதைக் கண்ட நொடி முதல், நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது.

எத்தனை உள்ளங்கள் உதவிகள் அன்புள்ள ஆறுதல்கள், பிரார்த்தனைகள், அலைச்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மீட்டு விட போராடியும் நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி, இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னை விட்டுப் பிரித்துவிட்டு சென்றது.

நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே. சக மனிதர்களோடு, மனிதத்தோடு வெறுப்பு, வன்மம், காழ்ப்பு இதை வளர்த்துக் கொள்ள மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு அதையே ஓர் வாழ்வியலாக்கி வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறோமோ என்ற சுயபரிசோதனைகளை மேற்கொண்டோமென்றால் இந்த நச்சு நம் பொது எதிரியாகி இந்த போர்க்களம் தன் தீர்வை நோக்கி நகரலாம்.

இங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது. என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீரர்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நன்றிகள்.

எனை சுற்றி ஒருவர் கூட நச்சின் கோரத்தில் நசுக்கப்படவில்லை என்பதே இழந்த ஒவ்வோர் இழப்புகளின் ஆன்மா சாந்தியடைவதற்கான வழி. மீண்டும் பல கோடி வாழ்நாள் நன்றிகள். இவ்வாறு அருண்ராஜா காமராஜ் பதிவிட்டுள்ளார்.

Suresh

Recent Posts

Sokka Vachaale Video Song

Sokka Vachaale Video Song | Thagappan | Jiiva | Rajisha | Marshall Robinson | Ra.Venkat…

18 hours ago

மிஷ்கின் தொட்டுப் பேசியதில் அசௌகரியமா? விமர்சனத்திற்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி!

இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான்…

22 hours ago

‘தர்மன்’ படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரைச் சூழ்ந்த…

22 hours ago

நடிகை நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

தென்னிந்தியத் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தனது 42-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.…

23 hours ago

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் இயக்குநருமான வம்சியும் பிரிந்துவிட்டதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும்…

23 hours ago

மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு கருத்துகள்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் அர்ஜுன்!

சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அர்ஜுனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவின்…

23 hours ago