அவதூறு வழக்கில் கங்கனா ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் – நீதிமன்றம் எச்சரிக்கை

நடிகை கங்கனா ரணாவத் மீது, ‘டிவி’ பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதுாறாகக் கூறியதாக, திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில், கங்கனா மீதான அவதுாறு வழக்கு, மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனாவின் வழக்கறிஞர் திரைப்பட விளம்பரத்திற்காக கங்கனா சென்றபோது, அவருக்கு கொரோனா அறிகுறி தோன்றி இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கனா ரணாவத் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, அடுத்தமுறை வழக்கு விசாரணைக்கு, கங்கனா நேரில் ஆஜராகத் தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஆர்.ஆர்.கான் எச்சரித்து, வழக்கை 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Suresh

Recent Posts

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…

5 hours ago

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ்

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…

5 hours ago

‘3 வித காதலை சொல்​லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..!

'3 வித காதலை சொல்​லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…

5 hours ago

”த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்” – இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்!

''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…

5 hours ago

இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..!

இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…

5 hours ago

Jilley Juice – Video Song

Jilley Juice - Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K…

7 hours ago