உங்கள மாதிரி இன்னொருத்தர் திறக்க முடியாது சீக்கிரம் வாங்க சார் என எஸ்பிபி குறித்து அர்ஜுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் பின்னணிப் பாடகராக பல ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி பிரபலமானவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.
இவர் கடந்த சில வாரங்களாக கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார்.
மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் வெகு விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக வலம் வரும் அர்ஜூன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணி பற்றி பேசியுள்ள அந்த வீடியோவில் உங்களை மாதிரி உலகத்தில் வேறு யாரும் பிறக்க முடியாது விரைவில் மீண்டு வாங்க சார் என கூறியுள்ளார்.
மேலும் கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையால் எஸ்பிபி அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…
கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், மர்மங்கள், காதல், நகைச்சுவை என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. கல்லூரியில்…
பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் இன்று காலை காலமானதாக வெளியான செய்தி, திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…