Another century for Anirudh with the song 'Chellamma' - Sivakarthikeyan happy
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெறும் ‘செல்லம்மா’ என்கிற பாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படக்குழு வெளியிட்டது. அனிருத், ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்த இந்தப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. யூடியூபிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் அதாவது 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனைக் கொண்டாடும் விதமாக ‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’ என குறிப்பிட்டு ஒரு சிறப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். டாக்டர் திரைப்படம் வருகிற மார்ச் 26ந் தேதி ரிலீசாக உள்ளது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…