annaatthe film villain joins Prabhas epic film
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான பிரபாஸ், தற்போது கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன், பாலிவுட் நடிகை வாணி கபூர் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஜெகபதி பாபு, சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் வில்லனாக நடித்து வரும் அவர், விரைவில் சலார் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.
தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் சலார் படம், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…