இந்திய நெல்லிக்காய் என்று அறியப்படும் ஆம்லா ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகக் கருதப்படுகிறது.
அதன் சாறு நமக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நன்மைகளை வாரி வழங்குகிறது. அந்த நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டால் நீங்கள் அதை விரும்பிப் பருகத் தொடங்குவீர்கள். நீங்கள் இதன் சாற்றை குடிக்கும் போது மின்னும் சருமத்திலிருந்து ஆரோக்கியமான உடல்நிலை வரை ஆம்லா வரிசையாக பல அற்புதமான நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது.
விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து நிரம்பிய நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால், பல ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், இது நம் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது.
அதன் கசப்பான சுவையால் முதல் பார்வையிலேயே அதை ஒதுக்கி வைக்கச் செய்யும். ஆனால் அதில் அணிவகுத்து நிற்கும் விலை மதிப்பற்ற ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்ஸிடன்டுகளும் ஆரோக்கிய ஆர்வலர்களுக்கு மத்தியில் அதை பிரபலமாக்கியுள்ளது.
கவனிக்க வேண்டிய மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், மற்ற எந்தவொரு பழங்களையும் மற்றும் காய்கறிகளையும் விட நெல்லிக்காயிலுள்ள அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட் செறிவுகள் அதை எந்தவொரு ஆரோக்கிய டானிக்குக்கும் சமமானதாக்குகிறது. வாருங்கள் வாசகர்களே! ஆம்லா ஜூஸின் அற்புத ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி ஆராய்வோம்.
நெல்லிக்காய் ஜூஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து புரத கூட்டிணைப்பை மேம்படுத்துகிறது, இதனால் நமது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு அனுமதிப்பதில்லை.
மேலும் இது நம் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு கொழுப்புக்களை எரித்து பங்களிப்பதன் மூலம் ஆற்றல் நிலைகளை மேலே உயர்த்துகிறது.
படித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க, அவர்களும் பயன் பெறட்டும்.
முருங்கைக் கீரை பொரியல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில்…
கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக…
சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது…
ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…