முடக்கற்றான் இலை வெப்ப வீரியம் உள்ளது இது துவர்ப்பும் கசப்பும் சுவையுடையது. இதனால் கிரந்தி கரப்பான் கீல் பிடிப்பு சினைப்பு குதிங்கால் வாதம் மலக்கட்டு போன்ற நோய்கள் தீரும் கசாயமிட்டு சாப்பிடலாம்.
நாயுருவி வேர் பயன்மிக்க மருத்துவப் பொருளாகவும் இதனால் காமாலை தீரும் சளி குறையும். இதன் வேர் கொண்டு பல் துலக்கி வர பல் சம்பந்தமான வியாதி போகும்.
பப்பாளி பழங்களை குணமாக்க உள்ள பழங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இது ஒரு சிறந்த கிருமி நாசினியாகும் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் கண் ஒளியை அதிகரிக்கும்.
ஒற்றை தலை வலி நீடித்து தொல்லை கொடுக்கும். ஆனால் மிளகு, பூண்டு, கடுகு, உளுந்து ஆகிய மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு நன்றாக காய்ச்சி வைத்து கொண்டு தலையில் தேய்த்து குளித்து வந்தால் குணமாகும்.
இடுப்பு வலி, கை கால் குடைச்சல் போன்ற தொல்லைகளுக்கு சிக்கன வைத்தியமாக கொஞ்சம் கோதுமை மாவை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அதில் சிறிது தேனை கலந்து பிசைந்து சாப்பிட்டு வர இடுப்பு வலி கைகால் குடைச்சல் நீங்கும்.
கடுமையான காய்ச்சலுக்கு கோரைக் கிழங்கை நீரிலிட்டு காய்ச்சி அந்த நீரை குடித்தால் நன்றாக வியர்க்கும் காய்ச்சலும் தணியும்.
இடைவிடாத இருமலுக்கு அதிமதுரத்தை தூள் செய்து அதில் கொஞ்சம் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் போதும். இருமல் தொண்டை கரகரப்பு இருந்தாலும் போய்விடும்.
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…