Alya Manasa About Raja Rani2 serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். ராஜா ராணி சீரியலில் நாயகியாக நடித்த இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் 2வது சீசனிலும் நாயகியாக நடிக்கிறார்.
முதல் சீஸனில் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். இதனையடுத்து தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வருகிறார். இதனால் இவர் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.
ஆலியா மானசா சீரியலில் இருந்து விலகவில்லை அவருக்கு ஏற்றாற்போல கதையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது எனவும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் ஆல்யா மானசா.
நான் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகவில்லை. என்னைக்குமே ஒரே சந்தியா தான் அது நான் மட்டும்தான் என தெரிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…