Allu Sirish six pack
இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ்.
இரண்டுக்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் தொடங்கிவிட்டார்.
புதிய படங்களுக்காக தனது உடலை எப்படியெல்லாம் தகுதிப்படுத்தியிருக்கிறார் என்பதை தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு திரையுலகிற்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.
சிக்ஸ் பேக்ஸ், அடுக்கடுக்காக அழகாகத் தெரியும் தசைகள் என அல்லுவின் உடலமைப்பு ரசிகர்கள் கண்களைக் கொள்ளையடிக்கிறது.
இதற்கு, சமீபகாலமாக அவர் மேற்கொண்ட தீவிர உடற்பயிற்சி தான் காரணம் எனக் கூறப்படுகிறது. சிரிஷின் அக்கறையும், அர்ப்பணிப்பும் அவருடைய புதிய லுக்கில் இருந்தே வெளிப்படையாகத் தெரிகிறது.
அண்மையில் அல்லு சிரிஷ் தனது முதல் இந்தி மொழி டேன்ஸ் நம்பர் விளையாத்தி ஷராப் பாடல் மூலம் யூடியூப்பை கலங்கடித்தார். அவரின் ஆட்டம்பாட்டத்தில் கிறங்கிப்போயிருந்த ரசிகர்கள் தற்போது அவரின் சிக்ஸ் பேக்கைப் பார்த்து வியந்து போயிருக்கின்றனர். அந்த டேன்ஸ் நம்பர் யூடிப்பில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து அல்லுவுக்கு பெரிய என்ட்ரியைக் கொடுத்தது.
இந்நிலையில் வரும் 30ம் தேதி தனது பிறந்தநாளன்று புதிய படங்கள் குறித்து அல்லு சிரிஷ் மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறார். அல்லு சிரிஷின் அடுத்தப் படத்தை GA2 Pictures நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவல் மட்டும் இப்போதைக்குக் கிடைத்திருக்கிறது.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…