alia-bhatt-happy-to-announce-the-birth-of-a-baby-girl
பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய இவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவர் கடந்த ஐந்து வருடங்களாக பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மும்பை, பாந்த்ராவில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த ஆலியா தற்போது அழகிய பெண் குழந்தையை பெற்றிருக்கும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது, இன்று காலை மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், எங்களது வாழ்க்கையின் முக்கியமான செய்தி இதுதான். எங்களது குழந்தை கைகளில். அழகான பெண் குழந்தை அவள். ஆசிர்வதிக்கப்பட்ட அன்பான பெற்றோராக மாறி இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்திக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் Kangana Ranaut, தற்போது அரசியலிலும் காலடி பதித்து எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். தமிழில் கடைசியாக…
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், Vijay தனது அரசியல் பயணத்தை…
R.J.Balaji இயக்கத்தில், Suriya மற்றும் Trisha நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’ மே மாதத்தில் வெளியாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப்…
தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இயக்குநராக திகழும் Atlee மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். ராஜா ராணி, தெறி, மெர்சல்,…
திரைத்துறையில் மட்டுமல்லாமல், கார் ரேசிங் உலகிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் Ajith Kumar. நடிப்பைத் தாண்டி, அதிரடி கார்…
Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…