Akshay Kumar movie released in 3D
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள இந்தி படம் ‘பெல் பாட்டம்’. 1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமாருடன் வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா முதல் அலையின்போதே லண்டனில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டனர்.
இதையடுத்து பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான சமயத்தில், கொரோனா 2-வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். பின்னர் சில பிரச்சனைகளால் ஓடிடி முடிவை கைவிட்ட படக்குழு, ஆகஸ்ட் 19-ந் தேதி திரையரங்கில் வெளியிடப்படும் என அறிவித்தனர். கொரோனா 2-வது அலைக்கு பின் வெளியாகும் பிரம்மாண்ட படம் என்பதால், ரசிகர்களை ஈர்க்க ‘பெல் பாட்டம்’ படத்தை ‘3டி’யிலும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது…