சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார்?

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தற்போது சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதன் இந்தி பதிப்பையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். மேலும் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் சூர்யாவின் மாறா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், அக்கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

13 hours ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 days ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

2 days ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

2 days ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

2 days ago