ak-62-movie-heroine details
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்த வருட பொங்கலுக்கு துணிவு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, சிபி சந்திரன் என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள 62 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் தற்போது அஜித் 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிப்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
ஆமாம் அஜித் 62 படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெகு விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…