Ajith will act in 3 new films
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. கொரோனா 2-வது அலை பரவலால் அந்த காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே, அஜித் நடிக்கும் 61-வது படத்தையும் வினோத் இயக்குவதாகவும் போனிகபூர் தயாரிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. 61-வது படத்துக்கான திரைக்கதையை வினோத் தயார் செய்து அஜித்திடம் சொன்னதாகவும் அவருக்கு கதை பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித் நடிக்க உள்ள மேலும் 2 படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை சூர்யாவின் சூரரை போற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்குவதாகவும் இன்னொரு படத்தை சிவா இயக்குவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
ஆனாலும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. சிவா ஏற்கனவே அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…