Ajith-Vijay clash again
அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதேபோல் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படமும் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற நவம்பர் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். இதையடுத்து பின்னணி பணிகளை வேகமாக முடித்து, பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம், விஜய் – அஜித் படங்கள் மீண்டும் நேரடியாக மோதும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கு முன்னர் அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஒரே நாளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…
டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவிப்…