ajith start a new social media page update
தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படம் குறித்த புகைப்படங்கள் மற்றும் அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் அஜித் குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, நடிகர் அஜித் விரைவில் சமூக வலைத்தள பக்கத்தை தொடங்குவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த கணக்கில் அவர் தனது திரைப்படத்திற்கு பிரமோஷன் செய்வது மட்டுமில்லாமல், தன்னுடைய பைக் ரைடு புகைப்படங்களையும் பதிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரவபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…