Ajith rides his bike to Russia
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. அங்கு ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. நேற்று முன்தினம் ‘வலிமை’ படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்ட நிலையில் அஜித் மட்டும் இன்னும் ரஷ்யாவில் தங்கியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரஷ்யாவில் தனது பைக் பயணத்தை அஜித் தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக ரஷ்யாவில் ஏற்கனவே பைக் பயணம் செய்தவர்களிடம் அவர் ஆலோசனை கேட்டு வருவதாகவும் விரைவில் அவர் ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரஷ்யாவில் பைக்குடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் ஏற்கனவே சிக்கிம் மாநிலம் வரை சுமார் 10,000 கிலோ மீட்டர் பைக்கில் பயணம் செய்தார். அதன் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…