ajith in ak62 movie shooting latest update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 வது படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் AK62 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் அப்படம் அந்த வருடத்தின் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. மேலும் அப்படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் இப்படத்தின் தயாரிப்பாளரான லைக்கா நிறுவன தலைவர் சுபாஸ்கரனை நேரில் சந்தித்துள்ளார். அதற்கான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…