Ajay Karthi, Deepa Balu’s STATION Shoot Begins
‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’ (STATION – Hunt For Survival). காதல், கிரைம், ஆக்ஷன் எனப் பல அம்சங்கள் நிறைந்த திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கேபி இன்போடெயின்மென்ட் (KP INFOTAINMENT) தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் எழுதி இயக்குகிறார். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காதல் உணர்வுகள், குற்றப் பின்னணி, சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி எனப் பல சுவாரசியமான அம்சங்கள் படத்தில் இடம்பெறுகின்றன.
இப்படத்தில் அஜய் கார்த்திக்கு ஜோடியாக தீபா பாலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநரும் நடிகருமான A. வெங்கடேஷ், மலையாளத் திரைப்படமான ‘திரிடம்’ மூலம் கவனம் ஈர்த்த தினேஷ் பிரபாகர், பாலஹாசன், ரமேஷ் திலக், மூணார் ரமேஷ், ஜெய் கிருஷ்ணா, வாழை ஜானகி, மெட்ராஸ் ரமா, அனு ஸ்ரீ வேலன், பிரகாஷ், சோபியா, சப்பாணி பாய்ஸ் முரளி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்தின் தனித்துவமான அம்சமாக, மொத்தக் காட்சிகளில் சுமார் 70 சதவீதம் காவல் நிலையத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளன. இதற்காகச் சென்னையில் உள்ள பிரபல திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்டமான காவல் நிலைய அரங்கம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. காட்சிகள் இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டு, அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்ப ரீதியாகவும் காட்சியமைப்பிலும் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் வகையில் வலுவான தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு:
– எழுத்து & இயக்கம் – மாறன் கார்த்திகேயன்
– தயாரிப்பு – கே. தினேஷ் குமார்
– ஒளிப்பதிவு – சுபாஸ் பாரதி
– இசை – அருண் ராஜ்
– கலை இயக்கம் – அய்யப்பன் S
– சண்டைப் பயிற்சி – பிரபு ஜாக்கி
– ஆடை வடிவமைப்பு – தினேஷ் பாபு G V
– படத்தொகுப்பு – முத்தையன் U
– நிர்வாகத் தயாரிப்பு – விக்கி ஆண்ட்ரு
– VFX மேற்பார்வை – சரவண பாலாஜி K (Time Stone FX)
– மார்க்கெட்டிங் – Digitally Powerful
– மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் (S2 Media)
வித்தியாசமான கதைக்களங்களிலும் புதிய முயற்சிகளிலும் கவனம் செலுத்தி வரும் KP INFOTAINMENT நிறுவனம், ‘STATION – Hunt For Survival’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.
தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படம், காதல், கிரைம், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் கலந்த விறுவிறுப்பான திரில்லர் அனுபவமாக ரசிகர்களுக்கு அமையும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
Sokka Vachaale Video Song | Thagappan | Jiiva | Rajisha | Marshall Robinson | Ra.Venkat…
இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான்…
நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரைச் சூழ்ந்த…
தென்னிந்தியத் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தனது 42-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.…
நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் இயக்குநருமான வம்சியும் பிரிந்துவிட்டதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும்…
சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அர்ஜுனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவின்…