விஜய்யைத் தொடர்ந்து சூர்யாவுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் ஜூன் 1-ஆம் தேதி வெளியான மாதவனின் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘சூர்யா 41’. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

இதனிடையே நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஒரு சில காரணங்களுக்காக யூ.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suresh

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

2 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

2 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

4 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

4 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

5 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

5 hours ago