adiyae movie is record-breaking hit
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்- கௌரி கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த ‘அடியே’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று வெளியானது. வெளியான முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வசூல் செய்த இந்த திரைப்படம், இரண்டாவது நாள் அதைவிட கூடுதலாகவும், மூன்றாவது நாள் அதைவிட கூடுதலாகவும் வசூலித்து இந்த வாரம் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக ‘அடியே’ வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உலக நாடுகளிலும் வெளியாகவிருக்கிறது. அதன் பிறகு இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆல்டர்நேட்டிவ் ரியாலிட்டி.. மல்டிவெர்ஸ்.. பேரலல் யுனிவெர்ஸ்… எனும் சயின்ஸ் பிக்சனுடனும், டைம் டிராவல்.. டைம் லூப்.. எனும் இளைய தலைமுறையை கவரும் உத்திகளால் சுவாரசியமான காதல்… திரைக்கதையாக இப்படத்தில் இடம்பெற்றதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பேராதரவினை பெற்று, பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்து வருகிறது.
‘அடியே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை தயாரித்த மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தொடர்ந்து தமிழ் திரையுலகில் தரமான படைப்புகளை வழங்கி முன்னணி பட தயாரிப்பு நிறுவனமாக உயரும் என்பது உறுதியாகி இருக்கிறது.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…